எங்கெல்லாம்
போகக்கூடாதோ
அங்கெல்லாம்
போகவைத்துடுகிறது
சில துர்நிமிடங்கள்
யாரையெல்லாம்
பார்க்கக்கூடாதோ
அவர்களையெல்லாம்
பார்க்க வைத்துவிடுகிறது
சில துர்ச்சகுனங்கள்
எவரிடமும் மண்டியிடக்
கூடாதென்றிருக்கையில்
யார்யாரிடமேனும்
மண்டியிட வைத்துவிடுகிறது
துர்ச்சாபங்கள்
யார் முன்னிலையிலும்
அழக் கூடாதென்றிருக்கையில்
இடம் காலம் பாராமல்
கதறி கதறி அழவைத்துவிடுகிறது
துர்க்காலங்கள்
இதற்குப் பின்னரும்
உன்னைக் கருணை
வந்தடையுமென்று நம்பும்
மன சிறையில் இருக்கும் பைத்தியக்காரன் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் நான்