நீங்கள் அதிகரித்து வரும் நெகிழி பிரச்சனைகள் குறித்து கவலை கொள்பவரா? நெகிழி மாசற்ற நலமான சமுதாயத்தை உருவாக்குதில் ஆர்வம் உள்ளவரா? எனில் நெகிழி குறித்த உங்கள் கருத்துக்களை உங்களது படைப்பாற்றல் மூலமாக வெளிப்படுத்தி, பாதுகாப்பான உலகத்திற்கான உங்கள் அக்கறையை பகிருங்கள்.
போட்டிக்கு தகுதிபெறும் அனைத்து படைப்புகளுக்கும் மின்-சான்றிதழ் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.
முதல் பிரிவு: பள்ளி மாணவர்கள்
இரண்டாம் பிரிவு: கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
தலைப்பு : ‘நெகிழி மாசற்றத் தமிழ்நாடு’
இந்த தலைப்பின் கீழ் உங்கள் படைப்புகள் நெகிழி தொடர்பாக எதுவாகவும் இருக்கலாம். உதாரணமாக நெகிழியால் ஏற்படும் பிரச்சனைகள், நெகிழிக்கான சரியான மற்றும் போலியான தீர்வுகள், சர்வதேச கழிவில்லாமைக்கான மாதம் (International Zero Waste Month), நெகிழி மாசுக்கு எதிரான வெற்றி கதைகள், குப்பைகள், நெகிழியற்ற பண்டிகைகள், மாற்று வழிகள் அல்லது வேறு எந்த வகையிலேனும் நெகிழி சார்ந்ததாக இருக்க வேண்டும்.
நெகிழி தொடர்பான உங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் உங்களது ஏதேனும் ஒரு படைப்பாற்றல் வழியாக வெளிப்படுத்துங்கள். உதாரணமாக, உங்கள் படைப்புகள் கதை, கட்டுரை, கடிதம், கவிதை, ஓவியம், புகைப்படம், கோலம், பாடல்கள், சிறு குறு காணொளிகள், பேட்டிகள் (பள்ளி மாணவர்களின் சிறு குறு காணொளிகள் ஏற்கப்படாது), போன்றவையாகவோ அல்லது வேறு எந்த வகையிலாகவோ இருக்கலாம்.
மொழி : தமிழ் அல்லது ஆங்கிலம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ptpc.poovulagu@gmail.com
கூடுதல் விபரங்களுக்கு: +91 90036 92117
இறுதி நாள்: 31 சனவரி 2026
குறிப்பு: நிச்சயமாக இந்த போட்டியில் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்தக்கூடாது.
#internationalzerowastemonth #plasticfreetn
#பூவுலகின் நண்பர்கள் #📺வைரல் தகவல்🤩 #போட்டி #சுற்றுச்சூழல் #🚨கற்றது அரசியல் ✌️