Kamal
15.7K views
17 days ago
#😍குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்🎉 தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு விடியலை கொடுத்துள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அரசுப் பணியாளர்களின் ஓய்வுக்கு பிறகான சமூக - பொருளாதார பாதுகாப்பிற்கு முதுகெலும்பாக இருந்த, மாதாந்திர உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை முடிவுக்கு கொண்டு வந்து, நிரந்தர இருளுக்குள் அவர்களை தள்ளினார் அம்மையார் ஜெயலலிதா. 2003 ஆம் ஆண்டு, நிதித்துறை அரசாணை 259 மூலம், புதிய அரசுப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தி துரோகம் செய்தது ஜெ. காலத்து அதிமுக. ஊதிய உயர்வு கேட்டு போராடிய அரசுப் பணியாளர்களின் சம்பளப் பட்டியலை வெளியிட்டு, அதற்கே அவர்களுக்கு தகுதியில்லை என்று அவமானப்படுத்தியது எடப்பாடி பழனிசாமி காலத்து அதிமுக. கல்வித்துறை உள்ளிட்ட உயிராதார நிதிகளை கூட முடக்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக. இவர்களுக்கு மத்தியில், துரோகங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், ஆண்டுக்கு 13,000 கோடி கூடுதலாக செலவானாலும், தமிழ்நாட்டின் அரசுப் பணியாளர் வாழ்வில் ஒளியேற்ற "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS)" அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். யாரும் எதிர்பார்க்காத அதிரடி இது. அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் 'திராவிட மாடல்' அரசின் மற்றொரு மகுடம். 20 ஆண்டு கால இருளுக்கு விடியல், அதிமுக காலத்து துரோகத்திற்கு தீர்வு என தமிழ்நாடு அரசுப் பணியாளர் வாழ்வில் மகத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தலைவர் வாழ்க வளமுடன்... #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #d . m. k # தி. மு. க. மாஸ் #I N D I A . UNITED WE STAND# DMK # முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்