https://youtube.com/watch?v=QVIleAM94gk&si=lzBguyR23sSpS3ob 🕉️✡️ தைப்பூசம் 2026 பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
விஸ்வாவஸு விசுவாவசு தமிழ் வருஷம் தைமாதம் 18/10/5126ம் நாள் 01/02/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தான் தைப்பூசம்.
இந்த வீடியோ பதிவானது தை மாதத்தில் வரும் பூசம் நக்ஷத்திரம் தைப்பூசம் தினத்தன்று அப்படி என்ன அவ்வளவு விசேஷம், இந்நன்னாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம் தான் இந்த வீடியோ பதிவு. ஆகவே அனைவரும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து அதன் ப்ரகாரம் அன்றைய தினத்தில் கடைபிடித்துக் கொண்டு ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்ரீ பால ஸுப்ரமண்யேஸ்வர ஸ்வாமியின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தை மாதத்தில் வரும் பூசம் நக்ஷத்திரம் அப்படி என்ன அவ்வளவு விசேஷம் என்றால் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் பூமியில் ஜநனம் எடுத்த பிறந்தநாள் இதே நாளில் தான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் ஜோதி மயமாக மோக்ஷம் முக்தி அடைந்த நாள். ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் வடலூரில் நம்மைப் போல் மனிதப்பிறவி எடுத்து ஸ்ரீ பால முருகப் பெருமான் மீது அதீத பக்தி கொண்டு இருந்தார். ஸ்ரீ பால முருகப் பெருமான் ஒரு நாள் இவரது கனவில் தோன்றி பூலோகத்தில் ஜனங்கள் மனிதப் பிறவிகளாக பிறந்த நிறைய பேர் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அவர்களது பசியை நீ தான் போக்க வேண்டும் என்று ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் கனவில் சொன்னார். உடனே இராமலிங்க அடிகளார் மருநாள் முதல் தனது பாட்டன் முப்பாட்டன் தனது தந்தை ஆகியோர் தனக்காக சேர்த்து வைத்து இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று பகல் இரவு என்று பாராமல் நாள் முழுவதும் ஒவ்வொரு நொடியும் எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் அருசுவை அன்னம் போட்டு பசியை போக்கிய மஹா ஸ்வாமிகள்.
இந்நன்னாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் நம்மால் வடலூர் செல்ல முடியும் என்றால் வடலூர் சென்று ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் ஆஸ்ரமத்திற்கு சென்று நம்மால் முடிந்த வரை அங்கு சமையல் செய்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து அன்னதானத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள் அவருடைய ஜோதி தரிசனத்தையும் பார்க்க வேண்டும். அவ்வளவு வசதி இல்லாதவர்கள் நமது அருகாமையில் உள்ள ஸ்ரீ முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று ஸ்ரீ முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு நம்மால் முடிந்த வரை அன்னதானம் இன்றைய தினத்தில் நிச்சயமாக கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் தாங்கள் அனைவரும் தைப்பூசம் நன்நாளில் கடைபிடிக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி