*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*21.01.2026 (புதன்)*
*⚜️மகிமை நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
*"இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்."* என கூறப்பட்டுள்ளது.
நோய் நொடிகள் அவதியுறும் அனைத்து மக்களையும் நம் இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 144:2-ல்,
*"என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! "* என கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள மக்கள் அனைவரின் அனைத்து துன்பங்களுக்கும் கேடயமாக இருந்து காப்பவர் நம் தேவனே. அவர் ஒருவரே நமக்குப் புகழிடம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*
*'விண்ணக மணவாளர் இயேசுவுக்கு என் கன்னிமையைக் கையளித்து விட்டேன்.'* என கூறி மரணத்தை துணிவுடன் எதிர் கொண்டு மறைசாட்சியாக மரித்த இன்றைய புனிதர் ஆக்னஸிடம் இருந்து மனவுறுதியையும், தூய்மைத்தன்மையையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,*
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்