Senthilvel Achari
3.4K views
11 days ago
கள்ளக்காதல் திடீரென கைவிட்ட கொழுந்தியாள்... உயிருடன் புதைத்த அக்கா கணவர்! தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே ஒசஅள்ளிபுதூரை சேர்ந்தவர் பிரபு (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், பிரபுவின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்து, உறவினர்கள் இது குறித்து பேச ஆரம்பித்து, ராஜேஸ்வரிக்கு அறிவுரைக் கூற ஆரம்பித்தனர். இந்நிலையில், அனுமந்தனுடன் பேசுவதை தவிர்த்த ராஜேஸ்வரி, முற்றிலுமாக ஒதுங்கி செல்ல துவங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மதியம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு சென்ற ராஜேஸ்வரியை, கடைசியாக பேச வேண்டும் என அழைத்து கல்லுகொல்லைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜேஸ்வரியை குழிக்குள் தள்ளி, தலை மீது கல்லை போட்டு கொன்றார். பின்னர் தயாராக வைத்திருந்த டிராக்டரில் இருந்த கட்டிட கழிவு மண்ணை குழியில் கொட்டி மூடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அனுமந்தனின் செயலில் சந்தேகமடைந்த அருகிலிருந்த விவசாயிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த பகுதியில் தோண்டிப் பார்த்த போது, குழிக்குள் இருந்து ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் அனுமந்தன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஜேசிபி ஆப்ரேட்டர் ஜெகன் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #😱மச்சினிச்சியை உயிரோடு புதைத்த மாமா😨 #📝இன்றைய செய்தி📡 #breaking news #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

More like this