தில்லியில் இன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில், இரட்டை திமில்களை கொண்ட ஒட்டகங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தின.
ராணுவத்தின் ரீமவுண்ட் & கால்நடைப் படையில் உள்ள இவை, பாக்டிரியன் ஒட்டகங்கள் என அழைக்கப்படுகின்றன.
லடாக்கின் தீவிர குளிரை சமாளித்து, குறைந்த தண்ணீர் & தீவனத்துடன் 15,000 அடி உயரத்திலும் சுமை தூக்கிச் செல்லவும், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு பணியிலும் இந்த ஒட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
#😍அனைவரையும் அசத்திய அணிவகுப்பு🔥