கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்டவை அடுத்தடுத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் 74 ஆயிரம் புதிய வீடுகளை கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் 3.5 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டதிட்டமிட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீதம் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டன. ஒரு மாத காலத்தில் அனைத்து வீடுகளும் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஒரு லட்சம் வீட்டிற்கு மனு பெறப்பட்டு அவர்களுக்கு வீடுகள் தர தயாராக தமிழக அரசு உள்ளது. இதுபோல பேரூராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் வீடுகள் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
முக ஸ்டாலின்
விரைவில் தமிழக முதல்வர் அறிவித்தவுடன் பேரூராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மற்ற திட்டங்கள் போல் இல்லாமல் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டும் பயனர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூபாய் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடியாக வீடு கட்டும் பயனாளர்கள், வங்கி கணக்கிற்கு பணம் சேர்ந்து விட்டது.
தவெகவுக்கு தாவிய அதிமுக புள்ளியின் மகன்.. நேரில் வரவேற்ற விஜய்! இது லிஸ்ட்லயே இல்லையே! அடுத்து?
கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம் திட்டம் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் குடிசை வீடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை அடைய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
பாமக பஞ்சாயத்து முடிஞ்சது.. அதிமுகவுடன் டீலை முடித்த அன்புமணி! பல்க்காக சீட்டை ஒதுக்கிய எடப்பாடி!
ரூ.3.5 லட்சம் வீடு
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, தற்போது ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை 25,657 குடும்பங்கள் புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மீதமுள்ள 74,343 வீடுகளின் கட்டுமான பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைத்து வீடுகளும் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்
கடந்த ஏப்ரல் மாதத்தில், மேலும் ஒரு லட்சம் வீடுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பேரூராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டவுடன், அந்த பகுதிகளிலும் வீடு கட்டும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடிசையில்லா தமிழகம்
மற்ற வீட்டு வசதி திட்டங்களைப் போல இல்லாமல், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.400 கோடிக்கும் மேற்பட்ட தொகை ஒதுக்கப்பட்டு, வீடு கட்டும் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இடைத்தரகர்கள் இன்றி வீடுகள் கட்ட முடியும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.
2026 சட்டசபை தேர்தல்
இந்தத் திட்டத்திற்கு திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, 2026 தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு முன்பே பயனாளிகள் அனைவருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதையடுத்து, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள் அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகள் ஒப்படைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
##📰டிசம்பர் 22 முக்கிய தகவல்📺 #ஏழைகளுக்கு வீடு