*ஸிம்ஹத்தின் கரத்தில் கோதண்டம்!*
கரஞ்ச வ்ருக்ஷத்தின் அடியில் காட்சியளித்த ந்ரஸிம்ஹரைப் பார்த்து வாயுபுத்ரன் கூறுகிறான்..
ஐயனே! என் ராமனின் கருணை அளப்பறியது! தன்னை பரம விரோதியாகக் கருதிய ராவணனுக்கே க்ருபை பண்ணியவன்.. நிராயுதபாணியாக நின்ற அவனை "இன்று போய் நாளை வா" என்று இரங்கியவன்!
அவன் பெயரை சொன்ன மாத்திரத்திலே அன்று, எனக்கு உப்பு ஸாஹரத்தைக் கடக்கின்ற வல்லமை கிட்டியது! அவன் பெயரை உச்சரித்தபடியே துக்க ஸாஹரத்தை அன்று ஸீதாமாதா கடந்தார்!
..இத்தனை விசேஷங்களை தன்னகத்தே கொண்ட என் ராமனையன்றி, என் நெஞ்சில் மற்றவர்க்கு இடமில்லை.. நான் அழைத்தது ஸ்ரீராமச்சந்திரனை!..
தேவரீரைக் கண்டவுடன் மரியாதை நிமித்தமாக அடியேன் கரம் குவித்தேன். ஆனால் மனப்பூர்வமாக அடியேனின் கரம் குவிவதும் - சிரம் தாழ்வதும் என் ராமனுக்கு மட்டுமே!
ஹனுமனின் ராமபக்தி ஆளரியை அசைத்துப் பார்த்தது.. இனியும் இவனோடு விளையாட வேண்டாம் என்று தீர்மானித்தவன், ஆதரம் பெருக, ராமனுக்கே உரித்தான குரலில் "வாயுபுத்ர" என்றழைக்கவும், ஹனுமன் உடலும் உள்ளமும் மெய்சிலிர்க்க தன் கண்ணை திறந்தான்...
அம்ம! இதென்ன கோலம்?!..
ஸிம்ஹத்தின் கரத்தில் ஸ்ரீராமன் கோதண்டம்!..
மலைத்து நோக்கினான் மாருதி!
"அரவணைப்பாய் சிரித்தான் ஆளரி!.. மாருதி, "உன் ஸீதாராமனும் நானே!
நீ இத்தனை நேரமாய் வாதிட்ட ஸிம்ஹனும் நானே!"
என்று புன்னகையுடன் கரங்களில் வில்லேந்தியபடி.. அந்த கரஞ்ச வ்ருக்ஷத்தினடியில் ஸேவை சாதித்தான் *ராகவந்ருஸிம்ஹன்*!
எதிரே நின்றவனிடம் இதுகாறும் "ராம" ப்ரபாவங்களை அடுக்கியவன், அங்கே, ராமனையும்-ஸிம்ஹனையும் "ஏகமூர்த்தியாக" கண்டதில் தன்னை மறந்து, சொற்களை இழந்து, கரம் குவித்தான்!
"புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்தமால் அடியை அல்லால்
மற்று எண்ணத்தான் ஆமோ இமை?!"✍🏼🌹
#good