*நாளை கார்த்திகை மாத கடைசி சோமவார விரதம் மற்றும் கார்த்திகை தேய்பிறை ஏகாதசி விரதம்.*
🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
எவ்வளவுக்கு எவ்வளவு சிவன் கோவிலுக்கு சென்று, அந்த எம்பெருமானை வழிபாடு செய்கின்றோமோ, அந்த அளவுக்கு நம்முடைய பாவங்கள் கர்ம வினைகள் குறையும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நாளைய தினம் கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் கடைசி திங்கள் கிழமை.
🐚
இந்த கடைசி சோமாவார விரத நாளில் சிவபெருமானை எந்த முறையில் வழிபாடு செய்வது, அம்பாளை எந்த முறையில் வழிபாடு செய்வது, சிவன் கோவிலுக்கு எந்த பொருளை முக்கியமாக வாங்கி கொடுக்கணும், என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
🐚
*ஐந்தாவது வார சோமவார வழிபாடு*
🐚
அந்த காலத்தில் எல்லாம் இந்த சோமவார விரதம் என்பது, 16 வாரங்கள் கடைபிடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆவணி மாதம் தொடங்கிய இந்த விரதத்தை ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, 4 மாதமும் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் நான்கு திங்கட்கிழமை, நான்கு மாதம் 16 வார திங்கட்கிழமை, இந்த சோமவார விரதத்தை எவர் ஒருவர் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலகும்.
🐚
அத்தனை செல்வ செழிப்பும் அந்த நபருக்கு கிடைக்கும். நோய் நொடிகள் விலகும். குடும்பம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. ஆனால் அப்படிப்பட்ட சூழல் இன்று இல்லை. 16 வாரம் திங்கட்கிழமைகள் எல்லாம் விரதம் இருந்து சிவபெருமானை இன்றைய அவசர காலத்தில் வழிபாடு செய்ய முடியுமா.
🐚
ஆனால் நாளை கார்த்திகை மாதத்தில் வரவிருக்கும் கடைசி திங்கட்கிழமை யாவது, சிவபெருமானை நிச்சயம் நம்மால் வழிபாடு செய்ய முடியும் அல்லவா. நாளை 16 லட்டு கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள். சிவபெருமான் கோவிலுக்கு செல்லுங்கள். கூடவே வெள்ளை நிற பூக்களை வாங்கி சிவபெருமானுக்கு கொடுத்து விடுங்கள். கொஞ்சம் சிவப்பு நிற வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் வாங்கி அம்பாளுக்கு கொடுத்து, அர்ச்சனை செய்து விடுங்கள். இந்த லட்டுவை சிவபெருமான் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
🐚
உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் தீர வேண்டும் என்று, பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். லட்டுவை வாங்கி ஒரு லட்டுவோ, இரண்டு லட்டுவோ வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் அந்த லட்டுவை கோவில் வாசலில் யாசகம் கேட்பார்கள் அல்லவா. அவர்களுக்கு தானமாக லட்டுவை கொடுத்து விடுங்கள். இந்த இனிமையான வழிபாடு உங்களுடைய வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
🐚
16 வாரம் சிவபெருமானின் நினைத்து கார்த்திகை சோமவார விரதம் இருந்த பலனையும் உங்களுக்கு கொடுக்கும். நாளைய தினம் முடிந்தால், ஒரு வேலை உணவு எடுத்துக்கொண்டு, ஒரு பொழுது இருந்து சிவபெருமானுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்னும் சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு மிகச் சிறந்த அளவில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தரும்.
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #💐Happy Monday #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏