பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
835 views
ஸ்ரீ (969 #ஆண்டாள் *திருப்பாவை* வேதம் அனைத்திற்கும் வித்து. மதநீர் பெருகுகின்ற, மதம் பிடித்த ஆண் யானையை உடையவனும், புறமுதுகு காட்டி ஓடாத அளவுக்கு வீரமும் வலிமையுமுடைய நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னைப் பிராட்டியே! நறுமணம் கமழ்கின்ற கூந்தலை உடையவளே! நீ வந்து கதவைத் திறப்பாயாக. எங்கு பார்த்தாலும் கோழிகள் கூவுகின்றன. குருக்கத்திக் கொடியாலான பந்தலின் மீது குயில் கூட்டங்கள் கூவிக் கொண்டிருக்கின்றன. *கண்ணபிரானை* விளையாட அழைக்கும் வகையில் பந்து பிடித்துக் கொண்டிருக்கின்ற விரல்களை உடைய கைகளை கொண்டவளே! நீ உன் மைத்துனன் ஆகிய எம்பெருமான் *கண்ணனின்* பெயரைப் பாடுவதற்காகவே நீ எழுந்து வா. அவன் புகழைப் பாடுவதற்காகவாவது நீ உன் கை வளையல்கள் குலுங்க , செந்தாமரைக் கையைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறப்பாயாக! ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஶரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏