ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
644 views
ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் நான்காவது டி20 போட்டி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான பிட்ச் எப்படி இருக்கும், டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2026 டி20 உலகக்கோப்பையை நெருங்கி வரும் வேளையில், இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றித் தன்னம்பிக்கையை அதிகரிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. மறுபுறம், ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, டி20 போட்டிகளில் ஒரு வெற்றியையாவது பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. விசாகப்பட்டினம் ஆடுகளம் எப்படி? விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தின் ஆடுகளம் பொதுவாகப் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருக்கும். இங்குப் பந்து வீச்சாளர்களுக்குச் சவாலாகவும், பேட்ஸ்மேன்களுக்கு வேட்டைக் களமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக மேலே எழும்பி வருவதுடன், வேகமாகவும் வரும். இதனால் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களை எளிதாக விளையாட முடியும். இங்கு பவுண்டரி எல்லைக்கோடுகள் சற்றுப் பெரியதாக இருந்தாலும், கடந்த கால போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 148 ஆகும். இங்குப் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 215, குறைந்தபட்ச ஸ்கோர் 82 ஆகும். எனவே, இன்றும் ஒரு ரன் மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். டாஸ் வென்றால் என்ன செய்யணும்? விசாகப்பட்டினம் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிக்குத் தான் பாதி வெற்றி உறுதி என்று சொல்லலாம். இங்கு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் பந்தைக் கிரிப் செய்து வீசுவது கடினமாக இருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக அமையும். இதுவரை இங்கு நடைபெற்ற 4 சர்வதேச டி20 போட்டிகளில், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் கேப்டன் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீச்சைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். IND vs NZ: 25 வயது வீரர் பேட்டிங்கில் பலவீனமே இல்ல.. பயத்தால் குழம்பி விடுகிறோம்- நியூசி. கோச் ஓரம் வீரர்கள் விவரம்: இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங். IND vs NZ: சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த நல்ல செய்தி.. இது தான் உங்களுக்கு கடைசி லக் நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவோன் கான்வே, டிம் சீஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், டிம் ராбинசன், பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஜக்கரி பவுல்க்ஸ் #🏏இந்தியா Vs நியூஸிலாந்து🔥 #🇮🇳நம்ம இந்திய அணி💙 #😎ஜஸ்பிரித் பும்ரா🔥 #🔥ரிங்கு சிங்🏏 #😍சூர்யகுமார் யாதவ்💫