செங்கம் அருகே வெறிநாய் கடித்து குதரியதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
இந்நிலையில் இன்று வெறி நாய் அப்பகுதியில் உள்ளவர்களை துரத்தி துரத்தி கடித்ததில் குழந்தை பெண்கள் உள்பட 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் வெறி நாய் கடித்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 17 பேரை வெறி நாய் கடித்து சிகிச்சைக்காக அனுமதித்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்