Sri madura Helth & Skin Care
1.1K views
4 days ago
கனு பசுமஞ்சள் தீற்றும் போது சொல்ல வேண்டியது #கானும் பொங்கல் . தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் சிறிய வயதில் தாலி கட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழ தையல் நாயகி போல தொங்க தொங்க தாலி கட்டி தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மாமியும் போற்ற பிறந்த கத்தோர் பெருமை விளங்க பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி புதுமாப்பிள்ளை மருமகளோடு புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும் ... என சொல்லி முகத்தில் மஞ்சள் பூசனும்.🌺 கனு பொடி வைக்கும் போது. இஞ்சி கொத்து இலை பரப்பி அதில் முதல் நாள் செய்த சர்க்கரை பொங்கல், கூட்டு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் கலந்த சாதம், கரும்பு துண்டு , வெற்றிலை வாழைப்பழம் வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றி கீழ் கண்டவாக்யத்தை சொல்ல வேண்டும். சூரியன் உதிப்பதற்குள் கனு வைக்க வேண்டும். ஏன் என்றால் பறவைகள் அதிகாலை 4 மணிக்கே எழுத்து விடும். காக்காய் பொடி வைத்தேன்... கனுப்பொடி வைத்தேன்... காக்காய் கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும்.. காக்காய் பொடி வச்சேன் கனுப்பொடி வச்சேன் காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் குருவிக்கு எல்லாம் கொண்டாட்டம் ... காக்கா கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும் என சொல்லி பிராத்தனையாக உடன் பிறந்தோர் ஆயுள் ஆரோக்யம் பெற்று வாழவும் , தன் குடும்ப ஒற்றுமைக்கும் வேண்டி தீபாரதனை காட்டி நமஸ்கரிக்க வேண்டும். ..... SavittriRaju