வெற்றிக்கான சில சிந்தனைகள்...
1)வெற்றிக்கான விதையை சிந்திக்கின்றோம். ஆனால், அதை விதைத்து பராமரிக்க மறந்து விடுகின்றோம்.
2)வெற்றியை கண்டடைய நாம் பல முயற்சிகளை செய்ய வேண்டும். வெற்றியை கண்டுபிடித்து விட்டால், அது நம்மை பின் தொடரும். ஆனால், அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
3) வெற்றியடைய மூன்று தடைகள் இருக்கின்றன. அலட்சியம், சோம்பல், கவனக்குறைவு. வெற்றிக்கான மூன்று சாவிகளும் இருக்கின்றன.
ஊக்கம், உற்சாகம், திட எண்ணம்.
4) மனதை ஒருமுகப்படுத்துவது தான் வெற்றிக்கான வழி. மனம் களைச்செடிகள் இல்லாத வாய்க்கால் போலவும், சிந்தனை அதில் ஓடும் தெளிந்த நீரைப் போலவும் இருக்க வேண்டும்.
5) குறிக்கோளை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருப்பதால் வெற்றி வசப்படும். சலிப்பான எண்ணம் வரக்கூடாது.அதில் நிதானமும் இழந்து விடக்கூடாது.
6) தனது வலிமையின் மேல் சந்தேகம் வருவது வெற்றியை பின்னுக்கு தள்ளும்.
மனமும் அதில் உற்பத்தியாகும் எண்ணமும் வலிமை குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
7)வெற்றியடைவேன் என்பவன் தான் உற்சாகமாக இருப்பான். அடைவோமா என்பவன் தோற்றுவிடுவான். விதையே பலவீனமாக இருந்தால் விளைவது எப்படி இருக்கும்?!
8 ) வெற்றிக்கான நிலையை அடையும் வரை அதற்காக தினசரி செய்யும் பயிற்சியில் எந்த தொய்வும் வந்து விடக்கூடாது. வெற்றிக்கான வாகன சக்கரத்தில் விவேகம் என்ற காற்று நிரம்பி இருக்க வேண்டும்.
9) ஒருமுறை அடைந்த வெற்றி அகந்தையை கொண்டு வந்து விடக்கூடாது. அகந்தை வெற்றியை பறித்து விடும். பணிவால் வெற்றி நீடித்திருக்கும் நிலைத்திருக்கும்.
10) வெற்றிக்கான தன்னம்பிக்கையுடன் கூடவே இறை நம்பிக்கையும் இணைந்திருக்க வேண்டும். ஒருவேளை தன்னம்பிக்கை குறையும் பொழுது இறை நம்பிக்கை மனதின் உள்ளே வந்து தன்னம்பிக்கையை அதிகரித்து விடும்.
நல்லது. வெற்றியடைய நல்வாழ்த்துக்கள்.
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #😆 பொங்கல் அலப்பறைகள் 🔥