Swamiye Saranam!
அனுதினமும்....
சுவாமி சரணம்....
சுவாமியே சரணம் ஐயப்பா...##
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஆன்மீகம்
👇👇👇
கோடான கோடி ஐயப்பமார்கள்
ஆன்மீக மெய்ய அன்பர்கள்
அறுபது நாட்களை கடந்த விரத காலம் நிறைவடைந்த நிலையில் பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது...
அனைவரும் அவரவர் சராசரியான வாழ்கைக்கு பெரும்பாலும் திரும்பிவிட்டோம்...
மனிதர்கள் தானே நாம் காலமெல்லாம் எங்கு புனிதனாக வாழ்வது இயற்கையோடு இணைந்து வாழும் சமூக அமைப்பில் நாம் ஒரு அங்கம்!
சற்று ஒரு நிமிடம்!
யோசித்து பார்த்தால்....
கடந்த இரண்டு மாதங்களாக சிலர் ஓடிக்கொண்டே இருந்தார்கள்
மனதாலும், உடலாலும், உழைப்பாலும் அவர்கள் உழைப்பானது பகவான் எனும் ஒருவனுக்காக இருந்தது...
சிலர் சுயநலமற்ற பகவான் சிந்தனையில் பூஜை செய்தார்கள்...
சிலர் பூஜைக்கான ஏற்பாடுகளை கவனித்தார்கள்...
சமூகத்தின் ஏளனத்தையும் தாண்டி சிலர் ஓடிக்கொண்டே இருந்தார்கள்...
யாரோ ஒருவர் என்றில்லாமல் பகவானுடைய பக்தன் அவனுக்கு தரிசனம் கிடைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்...
அங்கே நடக்கும் அநீதிகளை தவறுகள் கண்டு சிலர் இங்கே மனம் வருந்தினார்கள்...
சிலர் அவர்களுக்கு தெரிந்த பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள்...
சிலர் ஓய்வின்றி, உரக்கமின்றி பகவானையே நினைத்து பூஜைகள், பஜனைகள் பல பகுதிகளில் சென்று பாடித்திரிந்தார்கள்...
சிலர் அங்கே மலையில் பக்த சேவை என நேரம் பாராது டோலிகளில் மூச்சு திணறிய பக்தர்களை சுமந்து திரிந்தார்கள்...
சிலர் அன்னதானம், மருத்துவம், தண்ணீர் மற்றும் தூய்மை, சுத்தம் சுகாதாரம் பணி செய்து கொண்டிருந்தார்கள்...
சிலர் தன் குடும்பத்தை மறந்து பக்தனுக்காக இரவு பகலாக வாகனங்கள் ஓட்டி கொண்டிருந்தார்கள்...
சபரிமலை புனிதமான திருத்தலம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஜாதி, மதம், சமயம் அப்பாற்பட்டு மேலும் எந்த ஒரு வழிபாடுகளும் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் நடைபெறுவது அல்ல...
பலருடைய எதிர்ப்பு கேள்விகள், கேலிகள், கிண்டல்கள் துறந்து...
எண்ணற்ற உயர்ந்த தியாகங்கள், சேவைகள் உணவு மறந்து உறக்கம் மறந்து...
விலை மதிக்க முடியாத புனிதமான சேவைகள் இவை அனைத்தும் சகலமும் "சுவாமி சரணம் ஐயப்பா " எனும் ஒற்றை ஒரு மந்திரத்தின் உத்வேகத்தில் நடைபெறுகிறது...
ஒரு பூவிட்டு அவன் தாழ் பணிந்தோரையும் உள்ளத்தால் அவன் திருநாமம் ஒரு நொடியேனும் சிந்திப்போரையும்...
ஸ்ரீ தர்ம சாஸ்தா பகவான் ஐயப்பன் பக்தியும், சக்தியும், மகிமையும், பெருமையும், உலகமெங்கும் பரப்பதற்காக நித்தம் நித்தம் அவனுக்காக ஓடிய அத்தனை அத்தனை நல்ல உள்ளங்கள் திருபாதங்கள் தொட்டு நாங்கள் தல வழங்குகின்றோம்...!!!
அவனை நாடு!
அவன் புகழ் பாடு !
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்...
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
மு.சண்முக ஐயப்பன்
மும்பை
💐💐💐🙏🙏🙏