கவிஞர் கோபால்தாசன்
587 views
எங்கிருந்தோ வந்தாய்! -கோபால்தாசன் திடீரென மொட்டை மாடியிலிருந்து பாய்ந்து வந்ததை அடிக்க துரத்தியும் கையை ஓங்கியும் எள்ளளவும் பயமின்றி ஓடாது தைரியமாய் முன்னின்று காலடியில் படுத்தும் புரண்டுமாய் கால்களை தன்னுடலால் தேய்த்து அன்பைக் காட்டி மனதில் இடம்பிடித்து மொட்டை மாடியையே ஐக்கியமாக்கிக்கொண்டு நடைபயிற்சி போனால் முன்னும் பின்னுமாய் இடைமறித்து விளையாடும் பசி வந்தால் மேலிருந்து கீழிறங்கி வந்து 'மியாவ்' என அழைத்து பிஸ்கட்டே விருப்ப உணவாய் உட்கொண்டபடி பாதியில் வந்து வந்து கால்களை தன்னுடலால் தேய்த்து நன்றியை வெளிக்காட்டும் விதம் இருக்கிறதே... தாகத்திற்கு மேலே காகத்திற்கு வைத்திருக்கும் நீர்‌வேண்டாமென கீழிறங்கி வந்து குளிப்பதற்கு வைத்திருக்கும் சுத்தமான நீரையே அருந்தும் பெரிய பூனை வீட்டில் இன்னொருவராய் மாறிப்போனதை என்ன சொல்ல... #🐕செல்ல பிராணிகள் வீடியோ🐈 #🐥கியுட் பறவைகள் #🕊பறவைகள் #🐶அழகான நாய்க்குட்டி #🐕செல்ல பிராணி