லதாநடராஜன்
695 views
🌹🌹தை பூசம் ஸ்பெஷல்: 3 🌹சங்கத் தமிழில் வேல் வழிபாடு 🌹🌹முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு? *********************************************** ●முருகன் பிறந்த நாள் = வைகாசி விசாகம் ●அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகை யில் கார்த்திகை ●அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப் பூசம் ●அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசி யில் சஷ்டி ●வள்ளியை திருமணம்புரிந்த நாள் = பங்குனி உத்திரம் இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே தைப்பூசம். இந்த வேல் வாங்கிய நாளிலே, "வேல்" என்றா ல் என்ன என்று தெரிந்து கொள்வோம். வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்.வேல், சங்கத் தமிழில் எப்படியெ ல்லாம் வலம் வருகிறது என்று காண்போம்.. 🌹🌹வேல் - பெயர்க்காரணம்: ************************************ வேலுக்கு அப்படி என்ன சிறப்பு: வெல் = வேல்! 'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் = வெற்றி! வேல் - தமிழ்த் தொன்மம்: ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்ன ரகளின் தனித்த பெருமிதம் = வேல்.. *ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோ னாகிய கண்ணனைப் பாடுகிறார். *வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு.. *திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு.. சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது.. பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாரா ரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன.. சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத்தனிக் கோ ட்டமே இருக்கும். இந்த வேல் வழிபாடு நாள டைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ர ஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது: பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது.. வெறும் வேல் வழிபாடு தான்.. பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி,மலேசியாவில் பத்துமலை, மற்றும் பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்! 🌹🌹வேலின் அமைப்பு: *************************** வேல் எப்படி இருக்கும்? இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ? ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி. எஃகு ஒரு கலப்பு உலோகம் இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி. மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப் பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும். ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள். "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்.. ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா. தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் எஃகு வேலே! 🌹🌹வேலின் தோற்றம் *************************** * வேலின் முகம் = சுடர் இலை போல இருக்ககுமாம் * வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம். " சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்; சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை.." * வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும். * வேலின் முகமோ, பளு+ கூர்மை உடையதாக இருக்கும். வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது. அதெல்லாம் சினிமாவில் தான். ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும், சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்! 🌹🌹வேலும் ஈட்டியும் ஒன்றா?? *********************************** வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள். * வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும். * வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும். வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள். ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு. வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே. அனைவரின் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை! கான முயல் எய்த அம்பினில் - யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது . என்ற குறளே இதற்குச் சான்று. முயலுக்கு அம்பு, யானைக்கு வேல். 🌹🌹வேலின் சிறப்புப் பெயர்கள்: ************************************** கூர் வேல், நெடு வேல், சுடர் வேல், வீர வேல், வெற்றி வேல்...ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்! வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை 🌹🌹ஓம் சரவணபவ... 🌹கந்தா சரணம்... ஷண்முகா சரணம்... 🌹23.01.2026... நேசமுடன் விஜயராகவன்.... #🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #💐வாழ்த்து #LathaNataraj Edit'Z #🕉️ஓம் முருகா