ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
875 views
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. அதாவது மயில் பற்றிய உண்மையை சரவணன் குடும்பத்திடம் சொன்னதும் எல்லோரும் மயில் பாவம் என்று சொல்வார்கள் என்று நினைக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனுடைய வாழ்க்கைக்காக பாண்டியன் மற்றும் கோமதி இருவருமே மயிலின் பெற்றோருக்கு போன் செய்து பிள்ளையை கூட்டிட்டு போங்க என்று சொல்லி இருந்தனர். ஆனால் மயிலின் அம்மாவும் அப்பாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்து அவர்கள் அசிங்கப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு போயிருந்தனர். அதற்குப் பிறகு எப்படியாவது மீண்டும் இந்த குடும்பத்திற்கு வந்து விட வேண்டும் என்று மயில் அழுது கொண்டிருந்த நேரத்திலேயே, சரவணன் இனி மயிலுடன் வாழவே முடியாது என்று டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தன் மகள் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று குறுக்கு புத்தியில் யோசித்த மயில் அம்மா பாக்கியம் பாண்டியன் குடும்பத்தின் மீது வரதட்சணை கொடுமை கேஸ் போட்டு இருந்தார். இதனால் மொத்த குடும்பமும் ஜெயிலில் காத்திருந்தனர். ஒரு வாரமாக ஸ்டேஷன், கோர்ட் என்று இழுத்து இன்றைய எபிசோடில் தான் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. அதோடு மயில் அம்மா செய்த பித்தலாட்டத்தையும் பாண்டியனின் வக்கீல் நீதிமன்றத்தில் நிரூபித்து இருக்கிறார். இதற்கு இடையே யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் என்றால் கோமதியின் அண்ணன்கள் ஆன சக்திவேல் முத்துவேல் மனம் மாறி பாண்டியன் குடும்பத்திற்காக வந்து நின்றது தான். சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மை முத்துக்கு தெரிந்து விட்டது! ஆனால் மீனா கொடுத்த அதிர்ச்சி இதை மயில் குடும்பத்தினர் மட்டுமல்ல ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ இப்போ கோமதியின் அண்ணன் குடும்பமும் பாண்டியனின் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போது மயிலின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சைவம் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ பகிர்ந்து இருக்கிறார். அதுதான் இப்போது பலருடைய பாராட்டைப் பெற்றிருக்கிறது. தப்பே செய்யாதவங்க மேல பழி போட்ட பாக்கியம் இப்போ ஜெயிலுக்குள் இருக்கிறார். இதுதான் நல்ல முடிவு கண்டிப்பாக இதையே ஸ்டோரியா வைங்க இனி கோமதி, பாண்டியன் குடும்பத்திற்கு வில்லி இந்த பாக்கியம் தான் என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஒரு வாரமாக அழுகாச்சி காவியம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது பாக்கியம் நான் என் பொண்ணுக்கு போட்ட நகை எல்லாவற்றையும் பாண்டியன் குடும்பம் தரணும் என்று சொல்லி இருக்கிறார். ஆனா பாக்கியம் போட்ட என்பது பவுனுமே கவரிங் நகை என்பது ராஜி மற்றும் மீனாவுக்கு தான் தெரியும். இனி பாண்டியன் நகையை கொண்டு ஒப்படைக்கும் போது என்னுடைய நகையை ஏமாத்திட்டாங்கன்னு பாக்கியம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஜெயிலை விட்டு வந்த பாண்டியன் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! சிக்கும் மீனா, ராஜி அப்போ பாண்டியன் குடும்பத்திற்கு புது பிரச்சனையும் வரப்போகுது. அடுத்த வாரமும் ஸ்டேஷன் காட்சிகள் தான் இருக்கப் போகுது என்று தெரிகிறது. இந்த பஞ்சாயத்துக்கு சீக்கிரமா ஒரு முடிவை கட்டிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பயணிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. #⭐விஜய் தொலைக்காட்சி #📺எனக்கு பிடித்த சீரியல் #பாண்டியன் ஸ்டோர்