#செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
புளியநகரில் ரூ.15 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம்
ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி ஜன.10
சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட புளியநகரில் புதிய அங்கன்வாடி அமைத்து தரவேண்டும் என்று பேரூராட்சி சேர்மன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை வைத்தனர் .
ஊர் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார் எம்.எல்.ஏ.
அதன்படி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ரூ.15 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியினை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி தலைவர் அ.பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்.
சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, துணைத் தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாயர்புரம் நகர தி.மு.க.செயலாளர் கண்ணன், புளியநகர் ஊர் தலைவர் த. அறவாழி, நல்லாசிரியர் (ஓய்வு) ஞானராஜ், வட்டார காங்.தலைவர்கள் ஜெயசீலன் துரை, ஜெயராஜ், நகர காங்.தலைவர் இசை சங்கர், ஸ்ரீவைகுண்டம் நகர காங்.தலைவர் கருப்பசாமி, முன்னாள் நகர காங் தலைவர் மணி, புளியநகர் முன்னாள் ஊர் தர்மகர்த்தா பொன்பாண்டியன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.