புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அவர் கூறுகையில், "இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் ஜனவ 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இத்தாழ்வு பகுதி தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று இலங்கை ஊடாக தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தீவிரமாக இருக்கும்.
கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக கூடும். ஜனவரி 9,10ஆம் தேதிகளில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாக கூடும். உள் மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம். வட மாவட்ட விவசாயிகளும் ஜனவ 10,11 தேதிகளில் அறுவடை உள்ளிட்ட வேளாண்மை பணிகளை ஒத்திவைப்பது நல்லது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான திருநெல்வேலி, தேனி, தென்காசி கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதிகனமழை வரை பதிவாககூடும். இனி வரக்கூடிய நாட்களில் பெய்யும் மழை விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அடுத்தடுத்த நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெற்கு கேரளா கடலோரப் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஜனவரி 5,6ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்கிளலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், ஜனவரி 7ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 8,9,10ஆம் தேதிகளில் தென் தமிழகம், கடலோர தமிழகம், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்று (ஜனவரி 5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#வங்கக்கடலில் புதிய புயல் #உருவாகிறது புதிய புயல் #📺ஜனவரி 5 முக்கிய தகவல் 📢