*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹*
*ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.*
*என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.*
*வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.*
*நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.*
(திருப்பாடல்கள் 27:11-14)
*✝️ஜெபிப்போமாக :🛐*
*விண்ணுலகையும், மண்ணுலகையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்த, இறைவனுக்கே எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் - ஆமென்!*
*ஆண்டவரே! எங்கள் தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே, உம்மைப் போற்றி புகழ்கின்றோம். உம்மை காணவும், உம்மோடு உரையாடவும், இன்னொரு புதிய நாளை எனக்கு கொடுத்துமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.*
*இந்த நாளில் நான் செய்யப் போகும் அனைத்து செயல்களையும், நான் சந்திக்கப்போகும் அனைவரையும், உம்மிடம் ஒப்படைக்கின்றேன். என் செயல்கள் மூலம் உம்மை வெளிப்படுத்தவும், நான் சந்திக்கும் மனிதர்களிடத்தில் உம்மை பற்றி எடுத்துக் கூறவும் எனக்கு வாய்ப்பு தந்தருளும்.*
*ஆண்டவரே! பிரிந்து போன சகோதர சகோதரிகள், பிரிந்து சென்ற கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் அனைவரும், தங்கள் தவறுகளுக்கு மனம் வருந்தி, மீண்டும் ஒன்று சேர வேண்டும், ஒரே குடும்பமாக மாற வேண்டும் அப்பா.*
*ஆண்டவரே! எங்கள் உறவுகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரோடும், சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும், மகிழ்வுடனும் நாங்கள் பயணம் செய்ய, எங்களுக்கு உமது சமாதானத்தை அருள்வீராக!*
*இவ்வாறு கிறிஸ்துவ குடும்பங்கள், விண்ணரசின் தன்மையை இப்பூமியில் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாற அருள் புரிவீராக!*
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்