ச.திருமலை
1.7K views
12 hours ago
*⚛️🕉️கோவிலில் யார் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்*🕉️⚛️ இறைவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுவதாக இந்து சமயம் சொல்கிறது. அர்ச்சனை என்னும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான அர்ச்சா என்ற வார்த்தையில் இருந்தே தோன்றியதாக கூறப்படுகிறது. அர்ச்சா என்ற வார்த்தையின் பொருள் சிலை . கடவுள் சிலையின் முன்பு மந்திரங்களை ஓதுவதால் அது அர்ச்சனை என்றாகிவிட்டது. அதாவது அர்ச்சனை என்பது வேதம் பயின்ற ஒரு நபர் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும். பொதுவாக கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் கூறி அர்ச்சனை செய்வர். இன்னும் சிலர் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்வர். ஆனால் கடவுளின் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும? நம் பெயரில் எப்போது அர்ச்சனை செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னோர்கள் கூறுவதாவது... கடவுளை மகிழ்விக்க மந்திரங்களை ஓதி... அந்த சமயத்தில் நாம் அவரை மனதில் நிலை நிறுத்தி நம்முடைய குறைகளை அவரிடம் கூறுவதும், அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதும் தானே அர்ச்சனை செய்வதன் தாத்பரியம். நாம் சில வேண்டுதல்களோடு கோயிலிற்கு செல்லும் சமயங்களில் நமது பெயரில் அர்ச்சனை செய்து அவரிடம் மன்றாடி வேண்டிக்கொள்வது தான் முறை. அதுவே நமது வேண்டுதல்கள் நிறைவேறிய சமயத்தில் கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்து அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.. *🕉️ ஓம் சிவாய நமஹ* எல்லாம் வல்ல இறைவா ஈசனே போற்றி போற்றி. #🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #⚡ஷேர்சாட் அப்டேட் #சிறப்பான ஜோதிட தகவல்🙏