கார்த்திகேயன் சே
918 views
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 நல்விடியல்... சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை ஏற்றும் வைபவத்தை பிரதமர் செய்வது வழக்கம், ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம். அதாவது நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி. இதில் இன்னொரு வித்தியாசம் என்னவெனில் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார். ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார். ஏனெனில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவரே. இன்னொன்று, சுதந்திர தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தின கொடி பறக்கவிடும் நிகழ்வு ராஜ்பாத்தில் நடைபெறும். குடியரசுத் தலைவர் கொடியை பறக்க விடுவார்.