💘💞Par Tha💞💘
570 views
புத்தக வாசிப்புகள் ஏன் வெகுஜனங்களின் பொழுது போக்காக இருக்கவில்லை? மேற்கத்திய நாடுகளில் வாசிப்புகள் எல்லோரிடமும் சகஜமாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில்....? மக்களுக்குப் புரியிற மாதிரி எழுதணும். தான் எழுதியதற்கு தனக்கே விளங்கலைனு வெளியே சொல்லாமத் திரியிறவனைத் தான் அதிமேதாவி எழுத்தாளன்னு சொல்லிட்டு திரியிறோம். அப்படியான எழுத்தாளர்களை அதே நடையில் அவரின் குடும்பத்தில் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்? மூனே நாளில் போடா மூதேவினு வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவாங்க. (அது அவர்களுக்கே நல்லா தெரியும்) இந்த மாதிரி ஆட்கள் தான் மருத்துவர் எழுதிய ப்ரிஸ்க்ரிப்ஷனை கிண்டல் பண்ணி வேற பேசுவார்கள். இந்த லட்சணத்துல இவர்கள் புத்தகத்துல அரசியல் வெங்காயத்தை வேற உரிச்சுக்குவார்கள். வெகுஜனங்களுக்குப் புரியிற மாதிரியான அரசியல்/சமூகப் புத்தகங்கள் வராத வரை. இந்த நாட்டில் எளிதாகக் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க முடியும். அதுவரை இந்த அரைகுறை இந்த திடீர்ப் புரட்சியாளர்களின் புலம்பல்கள் தான் அரசியல்னு நம்ப வேண்டிய சாபத்திலிருந்து மக்கள் மீள மாட்டார்கள். இதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று் எழுபதுகள் வரை ரஷ்யப் பதிப்பகங்கள் மூலமாக இடதுசாரி பைத்தியப் புத்தகங்களை மொழிபெயர்த்து விற்றது தான். இன்னிக்கு வரை மொழி பெயர்ப்பு எழுத்து மாதிரியே எழுதிட்டு திரியிறார்கள். பொது மக்களுக்குப் புரியாத அரசியல்/சமூகப் புத்தகங்கள் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு டாய்லட் பேப்பராகத் தான் கொள்ளப்படும். #🤔தெரிந்து கொள்வோம்