ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
488 views
8 hours ago
. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.. அந்த வகையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனையானது.. இதனால் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனையானது.. இந்த நிலையில், சென்னையில் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.290 உயர்ந்து, ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ. 2,320 அதிகரித்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,600 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ## புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை 😱 #📢ஜனவரி 20 முக்கிய தகவல் 🫠