2009 செப்டம்பர் 23 தேதியிட்ட ஆனந்த விகடனுக்கு சீமான் அளித்த பேட்டியில் பிரபாகரன் சந்திப்பு குறித்து பேசியிருந்தார் சீமான். ‘’பிரபாகரனைச் சந்தித்த போது நாத்திகம், கடவுள் நம்பிக்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறமாகத்தான் எனக்கு மூளையில் உறைத்தது. பிரபாகரனைச் சந்திக்கும் முன்பு அங்குள்ள போராளிகள் மத்தியில் பேசினேன். அங்குக் காசிக் கயிறு கட்டியிருந்த ஒரு பெண் போராளியிடம் 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய் தங்கச்சி?' என்று நான் கேட்டது அப்படியே பிரபாகரன் காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் கடவுள் நம்பிக்கை குறித்த தன் எண்ணங்களைப் பிரபாகரன் பகிர்ந்துகொண்டார்’’ என சொல்லியிருந்தார் சீமான்.
அந்த பேட்டியின் மூலம் சீமானுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது. அதாவது பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையைச் சீமான் அன்றைக்கு பின்பற்றினார். அதனால்தான் 'நொடியில் சாகும் சயனைடைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, ஆயுளைக் காப்பாற்றும் என்று இந்த காசிக் கயிற்றை எந்த நம்பிக்கையுடன் கட்டியிருக்கிறாய்’ எனப் பெண் போராளியிடம் கேட்டிருக்கிறார். பெண் போராளியிடம் பேசியது உண்மையா? எனத் தெரியவில்லை. அது பக்கம் இருக்கட்டும்.
சீமான் பிறகு ஆத்திகனாக வேடம் பூண்டார். கறுப்புச் சட்டை தாங்கி பெரியார் தொண்டராக வலம் வந்த சீமான், பச்சை உடை தாங்கி முருக பக்தராக பிறகு மாறினார். 2015 பிப்ரவரி 7-ம் தேதி பழநியில், 'வீரத்தமிழர் முன்னணி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். சீமான் முருகனின் வேல் ஏந்த… மனைவி காவடி தூக்க நடந்தது அந்த விழா. பழநி பொதுக்கூட்ட மேடை இருந்த பேனரில் முருகனும், ராவணனும் இருக்க, ஒரு பக்கம் பிரபாகரனும், மறுபக்கம் சீமானும் சிரித்தார்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலில்தான் தன்னுடைய மகன் பிரபாகரனுக்குத் துலாபாரத்தில் எடைக்கு எடையாகப் பச்சரிசி அளித்து முடிக் காணிக்கை செலுத்தினார்.
முருகனை யார் தேடுகிறார்கள்?
#seeman #ntk
#📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல்