#அம்மா
அண்ணன்,தம்பி வேரறுத்து
தனித்தனியே தான் வாழ
தாயும் அவள் அனாதையாய்
தெருமுனையில் தான் கிடக்க.
பெத்த புள்ள பேர புள்ள அத்தனையும் ஒன்னும் இல்ல.
பெத்தவளே உன்னை வச்சு செய்யறாங்க பெரும் தொல்லை.
எல்லாம் மீறி போச்சு தாயே நீ படும் கொடுமை காட்சி.
வந்தவளின் ராஜ்யம் தான்
வாயும் கையும் அடங்கல பெத்தவளே உன் புள்ள நான் பாவம் பட்டு நிக்கையில.
அம்மானு நான் அழைக்க
அவள் இல்லாத நேரம் வேணும்.
சாப்பிட்டியா என்று நான் கேட்க செத்து செத்து பிழைக்க வேண்டும்.
புத்தாடை எனக்கு உடுத்தி நீ பூரிப்பாய் எனை ரசித்த
புது துணி உனக்கு எடுக்க
நான் பயந்து பதுங்குகிறேன்.
கந்தளாட சல்லடையில்
சூரிய ஒளி குடி போக நீ
சூட்டால் உடல் தவிக்க அதை
சொரணைக்கட்டு பாக்குற
பாவி ஆகி போனேன் அம்மா.
வந்தவளும் விதவிதமாய்
அடுக்குறாம்மா அலமாரியில்
அதில் ஒன்ன உனக்கு தர மறுக்குறாளே எனை முறைத்து. என் மனமும் மரணித்து.
மதிக்கட்டு நிக்கிறேன் அம்மா.
பக்குவமாய் பொங்க வெச்சு பலவிதமாய் சோறு போட்ட
பல ருசியாய் அதை ருசித்த நான். உன் உயிர் காக்க சோறு போட, தகுதியற்றுத் தரங்கெட்டு
நிக்கிறேன் அம்மா.
புது புது உறவு வந்து நம் வீட்டில் விதவிதமா உணவ தின்ன
உன்ன பாக்க வச்சு
அவர்களோடு நானும் உண்ண அது உணவில்லை எனக்கு
மலமாகி போனதம்மா.
உடல் வேர்வை உதிரம் சொட்ட வயிற்று பசி கண்ண கட்ட
நான் படிக்க பசி மறந்த உன் பசியாற்ற மறுத்தேன் அம்மா. மரணம் ஆகி நின்னேன் அம்மா.
உயிர் இருந்தும் மனம் இறந்து.
பேரப்புள்ள ஓடி வந்து
பாட்டின்னுதான் கத்த
பெத்தவளே உன்னை அவ பிச்சைன்னு தான் இழுத்து பிள்ளைகளை உள்ளே
தள்ளி கதவை சாத்த...
சத்தம் கேட்டு ஓடி வந்து பெத்தவளே உன்னை பார்த்து, செத்துப் போய் நின்னேன் அம்மா. சத்தம் போட்டு மனம் கதற
சத்தம் இன்றி விழி அழுவ.
பெத்தவளலே வளர்த்தவளே
பெத்தபுள்ள பேர புள்ள
ஒன்னும் உன்னை பாக்குலன்னா. செத்துபோய் தான்கிடந்த
நான் சத்தம் போட்டு தான் கதற
அக்கம் பக்கம் மக்கள் எல்லாம் கேவலமா என்னை பார்த்து இருக்கும்போது பார்க்காதவன் இறந்தபின் கத்துறான் என்று.
நீ உயிர் பிரிந்து பிணமானாய்.
நான் உயிர் இருந்தும்
பிணமானேன்.
மகள் காப்பாள், மகள் போனபின் வருபவள் காப்பாள் என்றுதான். மருமகள் என்றோம் அவள் எதிரியாய் இருப்பாள்
என்று எண்ணாமல் .
மண்ணுக்குள் போனவளே உன்னை எண்ணி புலம்புகிறேன் புண்ணான என் மனதால்.
தாயை இழந்த ஈன பிறவி
#அம்மா