Fahmi
529 views
6 days ago
#🕋யா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு... கண்ணியத்துக்குரிய உலமாப்பெருந்தகைகளே!!!... "வான்மறைக் குர்ஆனில் சூரா கஹ்ஃபிலே..... " وليتلطف " ( வல்யதலத்தஃப் ) 'அவர், மிக எச்சரிக்கையாக மதிநுட்பத்தோடு நடந்து கொள்ளட்டும்...!' என்ற பொருள்கொண்ட வாசகத்தை தடிப்பமான பெரிய எழுத்தில் அச்சடிக்கப் பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்!!!... அந்த வாசக வரிசையின் ஓரக்குறிப்பில்,, نصف القرآن ( நிஸ்ஃபுல் குர்ஆன்) 'குர்ஆனின் ஒரு பகுதி நிறைவுபெற்றது' என பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லவா....,, அந்த இடத்திலே " தஃப்ஸீர் ஜலாலைன் " எனும் குர்ஆன் விரிவுரைத் தொகுப்பின் அடிக்குறிப்பு விளக்கத்தில்.... ஆன்மீகப் பேரரசர் அல்லாமா இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ ரஹிமஹுல்லாஹு அவர்கள்,, அன்றாட ஓத வேண்டிய துஆவாக இப்படிச் சொல்வார்கள்...: يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف.... الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز.... أن يشا يذهبكم ويات بخلق جديد وما ذلك على الله بعزيز... " யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு யா லதீஃபு.... அல்லாஹு லதீஃபும் பிஇபாதிஹீ யர்ஜுகு மன் யஷாஉ வஹுவல் கவிய்யுல் அஜீஜு... இன் யஷஃ யுஃத்ஹிப்கும் வயஃதி பிஃஹல்கின் ஜதீதின். வமா ஃதாலிக அலல்லாஹி பிஅஜீஜின்....!""" "மென்மையானவனே! மதிநுட்பம் நிறைந்தவனே! நுண்ணறிவாளனே!! கவனம் நிறைந்தோனே!!! உளப்பக்குவம் தருவோனே!! இரக்கம் உள்ளவனே!! நெஞ்சில் குடியிருப்போனே!!! (யா அல்லாஹ்! நீதான்) அல்லாஹ்!!! தனது அடியார்கள் மீது (மிக்க ) இரக்கமுள்ளவன். அவன், தான் நாடியோருக்கு விசாலமான வாழ்வாதாரத்தை வழங்குகிறான்...! மேலும்,, அவனே பலம் வாய்ந்தவன். மிகவும் கண்ணியமிக்கவன். அவன் நாடினால்,, உங்கள் அனைவரையும் போக்கிவிட்டு... புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான். இந்த செயல்,, அல்லாஹ்விற்கு கடினமானதல்ல.(பெரியதுமல்ல)...!!!. இந்த துஆவை ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப்பின்,, வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து... இதயத்தை பார்த்துக் கொண்டே ஓதி ஊத வேண்டும்..‌. அவ்வாறு செய்தால், "சிந்தைத் தெளிவு பெற்ற உள்ளம் கிடைக்கும். தன்னிறைவடைந்த இதயம் கிடைக்கும். அல்லாஹ் ரசிக்கும் மென்மையான குணம் கிடைக்கும்...என்று! ஆக,, மனதில் நிம்மதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,, இந்த துஆவை அவசியம் செய்துதான் பாருங்களேன்... அடுத்த துஆ,,, இன்ஷாஅல்லாஹ் நாளை பார்க்கலாம்.. வஸ்ஸலாம்... என்றும் உங்களில் ஒருவன்,, "எஸ்டேட் மைந்தர் ஆலிம்" M.Y.அப்துர்ரஹ்மான் பாகவி பாஜில்மழாஹிரி. நிறுவனர்.புஷ்ரா இஸ்லாமிய நூல்கள் பதிப்பகம்.இராயபுரம். சென்னை. தலைமை இமாம் & தலைமை ஆசிரியர். ஜாமிஆ மஸ்ஜிது & மத்ரஸா. சீர்காழி V வடகால். 19-1-2026.