MithraSathish
504 views
23 hours ago
ஒரு நாள் காலை கண் திறந்தவுடனே “டீ போடுங்க…” “காபி சூடா இருக்கா?” பிஸ்கட் மொறிக்கும் சத்தம். 8 மணிக்குள் இட்லி, தோசை, பொங்கல், பூரி— இதில் ஏதாவது ஒன்று மேசையில் இருக்கணும். 11 மணிக்கு டீ, வடை. 1 மணிக்கு பாயசம், வடை, மீன், கறி, முட்டை— “இதுல ஏதாவது ஒண்ணு இல்லையா?” 3 மணிக்கு ஜூஸ், டீ, காபி… பஜ்ஜி, போண்டா. சில நாளில் “எல்லாமே வேணும்!” 5 மணிக்கு மறுபடியும் டீ. 8 மணிக்கு சப்பாத்தி, வெரைட்டி சாப்பாடு— அதாவது டின்னர். இது எல்லாம் மனிதர்கள் சாப்பிடுவது. இதில் ஒரு நேரம் தப்பினா போதும்… குரல் உயரும். கோபம் வரும். எரிச்சல் வார்த்தையாவும். சில நேரம் கைகளும் பேசும். “சாப்பாடு கிடைக்கலன்னா மனிதன் மிருகமா மாறிடுவான்” னு சொல்வோம். ஆனா— அதே தெருவில் ஒரு நாய். அதுக்கு காலை உணவு குப்பைத்தொட்டில. நேற்று வீசிய அரை பழைய சாதம் கிடைக்குமா னு மூக்கை நுழைக்கும். பிளாஸ்டிக்கை கவ்வும். கண்ணாடி துண்டு குத்தும். வயிறு வலிக்கும். கிடைத்தது— ஒரே ஒரு சின்ன எச்சில் எலும்பு. சாதமே இல்ல. அதையும் அவசரமா எடுத்துக்கிட்டு ஓடும். ஏன்னா இன்னொரு நாய் பிடுங்கி செல்ல வரலாம். மதியம். ஒரு வீட்டிலிருந்து மீன் குழம்பு வாசனை. வயிறு சத்தம் இடும். வாசல் வரை வரும். தலை குனியும். வால் ஆட்டும். “ஹே! போ!” ஒரு கல்லு. ஒரு காயம். ஒரு அவமானம். அது ஓடும். அழுவதில்லை. கத்துவதில்லை. ஏன்னா அவர்கள் பசிக்காக அழுதால் யாரும் கேட்க மாட்டாங்கனு அதுக்கு தெரியும். மாலை. டீ கடை முன் உட்காரும். பொரை விழுமானு காத்திருக்கும். விழவில்லை. ஒரு குழந்தை பிஸ்கெட் கையில். அம்மா சொல்றாங்க— “நாய்க்கு கொடுக்காதே… கடிச்சிடும்.” அந்த நாய் கடிக்கலை. கிட்ட வரல. தூரத்திலிருந்து பார்த்துட்டே பயங்கரமான பசியால் நின்றது. இரவு. கல்யாண வீடு. சாப்பாடு வாசனை தெருவே நிறைக்கும். நம்பிக்கையோட உள்ளே நுழையும். “அய்யோ! நாய்!” குச்சி. அடி. வலி. அது மீண்டும் ஓடும். ஒரு காலில் ரத்தம். வயிற்றில் பசி. அந்த இரவு ஒரு பாலம் கீழ் அது சுருண்டு படுக்கும். கனவுல— ஒரு பாத்திரம். சூடான சாப்பாடு. யாரும் விரட்டல. யாரும் அடிக்கல. கனவுல கூட அது மனிதனை கடிக்கல. காலை— அதே குப்பைத்தொட்டி. அதே பசி. நாம் ஒரு வேளை சாப்பாடு தாமதமானா மனிதத்தையே இழக்கிறோம். ஆனா அவை ஒரு வாழ்க்கை முழுக்க சாப்பாடே இல்லாம இருந்தும் மனிதத்தன்மையை இழக்கவே இல்ல. அடுத்த முறை நீங்க சாப்பிடும்போது ஒரு கைப்பிடி வெளியே வைங்க. உணவை வீணாக்கும் போதெல்லாம் இவர்கள் பசிக்காக ‌ஒவ்வொரு நாளும் எவ்வளவு போராட்டத்தை சந்திக்கிறார்கள் என்பதை நினைத்து பாருங்கள் 🙏 மனிதர்களுக்கு 8 வேளை உணவு.. நாய்களுக்கு ஒரு வேளை கூட நல்ல உணவு கிடையாது.. ஏழை மனிதர்களை தேடி தேடிச் சென்று நல்லது செய்பவர்கள்.. இதுபோன்ற பசியால் வாடும் ஜீவன்களின் பசியைப் போக்குங்கள்🙏🙏 தயவுசெய்து அனைவரும் உணவளியுங்கள் 🙏🙏 #🐕செல்ல பிராணிகள் வீடியோ🐈 #🐕செல்ல பிராணி #🐶Pet Love❤ #🐶அழகான நாய்க்குட்டி #🐱அழகிய பூனை குட்டி