AMANLATCHOUMY
1.7K views
செல்வமும் செல்வாக்கும் தரும் குபேர தலம் மதுரை திருவாப்புடையார் """"""""""""""""""""""""""""""""""" செல்வத்தின் அதிபதியான குபேரன் அந்த பதவியை பெற காரணமான தலம் மதுரை செல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் ஆகும் பிரம்மதேவனின் குலத்தில் வந்த புண்ணியசேனன் என்ற சிவ பக்தன் அழியாத செல்வத்தை பெற விரும்பி அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் கடும் தவம் புரிந்தார் அவரது பக்தியால் மகிழ்ந்த சிவன் அவருக்கு குபேரன் என்ற அந்தஸ்தையும் அழகாபுரி என்னும் நகத்தையும் பரிசாக அளித்தார் அதுமட்டுமின்றி உலகத்தின் ஒட்டுமொத்த செல்வங்களான சங்க நிதி பதுமை நிதி ஆகியவற்றை நிர்வாகிக்கும் பொறுப்பை இத்தால இறைவன் குபேரனுக்கு வழங்கினார் செல்வம் பெருக பணத்தடை நீங்க தொழிலில் லாபம் பெற வெள்ளிக்கிழமைகளில் இங்கு சிவனுக்கு அர்ச்சனை செய்வது விசேஷம் இங்கே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் மதுரையில் இருக்கும் பஞ்சபூத தலங்களில் இது அப்புத்தலமாகும் அதாவது நீர்தலமாகும் ஒரு முறையாவது இத்தலத்திற்கு சென்று திருவாப்புடையாரை வணங்கி சகல சம்பத்துகலை பெறலாம் #ஆன்மீகம்