N.Ramachandran
508 views
1 days ago
https://youtube.com/watch?v=8eNOlEnYDtg&si=e43K4rjLFexsWk-a 🕉️✡️ தைக் கார்த்திகை (கிருத்திகை) பற்றிய முழு விளக்கம். ✡️🕉️ விஸ்வாவஸு விசுவாவசு தமிழ் வருஷம் தைமாதம் 13/10/5126ம் நாள் 27/01/2026 செவ்வாய் கிழமை அன்று தான் தைக் கார்த்திகை (கிருத்திகை) விரதம். இந்த வீடியோ பதிவானது தைக் கார்த்திகை (கிருத்திகை) நன்நாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம். ஆகவே அனைவரும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து ஸ்ரீ பால ஸுப்ரமண்யேஸ்வர, ஸ்ரீ பால தண்டாயுதபாணி, ஸ்ரீ வல்லி தெய்வானை ஸமேத ஸ்ரீ ஸுப்ரமண்யேஸ்வர ஸ்வாமியின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத் ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கார்த்திகை (கிருத்திகை) விரதம் என்பது ஸ்ரீ பால ஸுப்ரமண்யேஸ்வர ஸ்வாமி முருகப் பெருமானை எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்கள் 07 பேருக்காக இருக்கும் விரதம் தான். ஆனால் கலியுகத்தில் முருகப் பெருமானை கார்த்திகை பெண்கள் 07 பேர் வளர்த்ததற்காக நாம் அனைவரும் ஸ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கு பூஜை செய்கின்றோம். இதை முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தைக் கார்த்திகை (கிருத்திகை) விரதம் நன்நாளில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால்: அதிகாலையிலேயே எழுந்து ஸ்நானம் குளியல் செய்து விட்டு காலை வேளையிலேயே நமது அருகாமையில் உள்ள ஸ்ரீ வல்லி தெய்வானை ஸமேத ஸ்ரீ ஸுப்ரமண்யேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு சென்று அங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்ரீ பால ஸுப்ரமண்யேஸ்வரர் ஸ்ரீ வல்லி தெய்வானை ஸமேத ஸ்ரீ ஸுப்ரமண்யேஸ்வர ஸ்வாமிக்கு செவ்வரளி மாலை சாற்றி ஸ்வாமியின் திருப்பாதங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள். 🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி