VENKATESWARAN. A.
483 views
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2026 - 2027. ஆம், மத்திய அரசு 2027 இல் இந்தியாவின் 16-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த உள்ளது, இது ஏப்ரல் 2026 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2027 ஆம் ஆண்டு வரை இரண்டு கட்டங்கள் நடைபெறும் ; இதில் மக்கள் தொகை சாதி வாரி கணக்கெடுப்பு (SC / ST தவிர) முதல் முறையாக மேற்கொள்ளப்படும், இது டிஜிட்டல் முறை நடைபெறும். முக்கிய அம்சம் : 1. காலக்கெடு : வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் - செப்டம்பர் 2026 ஆம் ஆண்டு வரை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027 இல் முடிவடையும் வகையில் மார்ச் 1, 2027 வரை நடைபெறும். 2. கட்டங்கள் : இரண்டு கட்டங்கள் நடைபெறுகிறது : முதல் கட்டம் வீடுகள் பட்டியல் மற்றும் வசதி (ஏப்ரல் - செப்டம்பர் 2026), இரண்டாம் கட்டம் மக்கள் தொகை (பிப்ரவரி 2027). 3. சாதி வாரி கணக்கெடுப்பு : SC / ST தவிர்த்து, பிற சாதி விவரங்கள் சேகரிக்கப்படும் முதல் முறை. 4. டிஜிட்டல் வடிவம் : இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. 5. நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ரூபாய் 11,718/- கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. 6. தாமதம் : கோவிட் பெருந் தொற்று காரணம் 2020 - 2021 இல் நடக்க இருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதம் ஆனது. 7. குறிப்பு : இது 2011-க்குப் பிறகு நடைபெறும் முதல் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. #இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : 2026 - 2027.