ஆறுகாணி பகுதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் இயங்காத பேருந்து நடைகள்: நடைகளை இயக்க மக்கள் கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் இயங்கி வரும் 311M/A பேருந்தின் காலை நேர சேவை இயங்கி வருகிறது. ஆனால் மாலை 5.30 மணி சேவை ஞாயிற்றுகிழமை நாட்களில் இயங்குவதில்லை. மேலும் ஆறுகாணி பகுதியில் அருமனை வழியாக இயங்கும் 311M/B பேருந்தின் 3 நேர நடைகள் இயங்குகின்றன. ஆனால் மாலை 4.20 மணிக்கு இயங்க வேண்டிய பேருந்தின் சேவை தற்போது சில காலங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் 1.20 மணி கழித்தால் அருமனை வழியாக செல்ல மாலை 6.45 மணிக்கு தான் அடுத்த பேருந்து உண்டு. இப்பேருந்தின் சேவை இல்லாத காரணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த இருப்பேருந்துகளின் நடைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்