Barakath Ali
624 views
2 days ago
பழைய பேப்பர்! வள்ளுவர் எங்கெல்லாம் பயன்படுகிறார்! இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து 2017 ஏப்ரல் 25-ஆம் தேதி டிடிவி தினகரனை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடந்த காலக்கட்டம் முக்கியமானது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக சொல்லி அவருக்கு எதிராக தினகரன் போர்க்கொடி தூக்கினார். அதிமுக எம்.எல்.ஏ-கள் 18 பேர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆட்சி கவிழும் சூழல். இதனால், எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் காலில் விழுந்தார். இதன் பிறகுதான் தினகரன் மீது இரட்டை இலை வழக்கு, கைது, மெகா ரெய்டு, 18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்கம் என அடுத்தடுத்து அதிரடிகள் நடந்தன. தன்னை கைது செய்த பாஜகவிடமே இன்று சரண்டர் ஆகிவிட்டார் தினகரன். '‘இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்திருக்கிறோம்’’ என சொல்லியிருக்கிறார் தினகரன். வள்ளுவர் எங்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள்! #TTVDhinakaran #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல் #தமிழ்நாடு அரசியல்