#azagaana vaalkkay thathuvam என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், நான் தான் என்னைத் தாங்கி நிற்க வேண்டும் என்பதை மறக்கமாட்டேன். எவ்வளவு போராட்டங்களையும் வலியையும் நான் கடந்து தாண்டி வந்தேன். அனைத்தையும் தாங்கித் தாண்டி வர துணை நின்ற என் இதயத்தை (மனோதைரியத்தை) நான் தான் தளராமல் பாதுகாக்க வேண்டும்.
எவ்வளவு வயதானாலும் உடலில் குறைபாடுகள், தோலில் சுருக்கம் விழுந்தாலும் என்னை அதிகமாக நேசிக்க வேண்டிய நபர் நான் மட்டுமே.என்னை நேசிப்பதை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ மாட்டேன். எனது வாழ்க்கையில் எனது வேலையை என்னை விடச் சிறப்பாக எனக்குப் பிடித்த மாதிரி செய்ய வேறு யாராலும் முடியாது, ஏன் என்றால் என்னை என் வாழ்க்கையை நான் மிகவும் நேசிக்கிறேன்.
இதை மேலோட்டமாக உதடு அளவில் படித்தால் புரியாது, மனதார உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் தைரியமாக நினைத்து உங்கள் வாழ்வை நினைத்துப் படித்தால், நிச்சயம் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, முன்னேற்றப் பாதை நோக்கி உங்கள் மனம் உங்களை உந்திச் செல்லச் செய்யும். 😊😊😊