ஜனவரி 27,28,29 ஆகிய அடுத்த மூன்று நாட்களில் அறப்போர் இயக்கம் தொடுத்த மூன்று வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.
1. ஜனவரி 27 அன்று அதிமுக ஆட்சி காலத்தில் 2019-இல் தாமரைக்கேணி ஏரியில் மண்ணை நிரப்பி செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டத் துவங்கினர். இதன் மீது அறப்போர் இயக்கம் புகார் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு தொடுத்தது. அப்போதைய எதிர்க்கட்சி திமுகவின் கனிமொழி உள்ளிட்டவர்கள் இப்படி ஏரியை ஆக்கிரமிக்கலாமா என்றெல்லாம் ட்விட்டர் பதிவு போட்டுவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அது நீர் நிலை இல்லை என்று தற்போது திமுக அரசு வாதாடி வருகிறது. அறப்போர் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்து தற்பொழுது உயர்நீதிமன்றம் காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற இடம் கண்டுபிடிக்கும் படி அறிவுறுத்தி இருந்தது. இதன் இறுதி விசாரணை நாளை நடைபெறும்!
2. அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக இருந்த 2021 - 2022 காலகட்டத்தில் ரூபாய் 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் மின்சார வாரியத்தில் நடந்ததற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் கொடுத்திருந்தது. இதன் மீது முதல் தகவல் அறிக்கை மற்றும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய 2024ல் அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. அதன் விசாரணை ஜனவரி 28 சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும்!
3. பள்ளிக்கரணை ராம்சார் நிலத்திற்குள் முறைகேடாக பிரிகேட் நிறுவனத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரியும் ராம்சார் நிலங்களை முழுவதுமாக வனத்துறையிடம் ஒப்படைக்க கோரியும் அறப்போர் இயக்கம் தொடுத்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஜனவரி 29 விசாரணைக்கு வருகிறது!
அறப்போர் தொடரும்! #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️