SDTU தொழிற்சங்கத்தின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு
இளங்கடை புனித அந்தோனியார் சமூக நல கூடத்தில் 25-1-2026 அன்று SDTU மாநில செயற்குழு
உறுப்பினரும் நெல்லை மண்டலத்தலைவர் இமாம் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் ரௌஃப் நிசார் பங்கேற்று
சிறப்பித்தார். புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக பாபு உசேன்,துணைத்தலைவராக
அமானுல்லாஹ், மாவட்டச் செயலாளராக காதர் மைதீன், துணைச் செயலாளராக சையதுஅலி
மற்றும் சாதிக்அலி.பொருளாளராக ஷேக்அப்துல் காதர்,செயற்குழு உறுப்பினர்களாக ஷெரிப்
மற்றும் லியாக்கத் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிகழ்வில் தொழிலாளர் நலன்
கருதி தீர்மானமாக
1, ஒன்றிய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
2, 13 ஆண்டுகள் மாற்றப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும்.
3, ஓலா ஊபர் போன்ற பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும்.
4, குமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரி செய்யப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர்
சுல்ஃபிகர் அலி. மாவட்ட பொதுச் செயலாளர் நாகூர் மீரான் முகைதீன். மாவட்டத் துணைத் தலைவர்
ஜாகிர் உசேன்.மாவட்டச் செயலாளர்கள் ஜாபர் அலி,மணவை சாதிக் மற்றும் நாஞ்சில் செய்யதலி,
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் சலீம், செயலாளர் சௌகத் அலி, நகரத் தலைவர் சையது
ஷாக் நகரச் செயலாளர் முகமது அலி,விவசாய அணி தலைவர் சிகாப்தின், கலை இலக்கிய அணி
தலைவர் சாகுல் ஹமீது சுபைர். ஆகியோர் கலந்து கொண்டனர், இறுதியாக SDTU மாவட்ட துணைச்
செயலாளர் சாதிக் நன்றியுரை ஆற்றினார்
டைம்ஸ் ஆப் கஜா டிவி
செய்தி விளம்பர தொடர்புக்கு 9659520537
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்