இரவு ஜெபம்*_
_*எம் அன்பு ஆண்டவரே! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.*_
_*கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.*_
_*அன்புள்ள ஆண்டவரே, நீர் எப்பொழுதும் எங்களுடன் இருப்பதை உமது வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, "மேலும் பயப்பட வேண்டாம், நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறேன்" என்று உறுதிபடுத்துகின்றீர். இப்போது எங்களைச் சுற்றியுள்ள புயல்களின் புகலிடம், அமைதி மற்றும் வலிமையைக் காணும் ஒரே இடம் நீர்தான். இதுவே நாங்கள் தேடும் உமது முகம் அப்பா!*_
_*ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே.*_
_*எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †*_
_*🌹இனிய இரவு வணக்கம்! 🌹*_
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்