*புனித ஜார்ஜியாரிடம் வேண்டிக்கொள்ளும் நவநாள் செபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
👑🏇🏻👑🏇🏻👑🏇🏻👑🏇🏻👑🏇🏻
*புனித ஜார்ஜியாருக்கு நவநாள் ஜெபம்*
🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே! நீர் விசேஷமாய் களங்கமற்ற இருதயமுள்ளவர் களுக்கும் உமது உதவியை நாடிவருபவர்களுக்கும் செய்து வரும் அற்புத அதிசய நன்மை. களால் சர்வ வல்லவரான கர்த்தருக்குண்டாகும்
மகிமையைக் கண்டு நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம்.
மென்மேலும் உமது நாமம் பிரபலியப்படவும், உம்முடைய புதுமைகள் எல்லாவிடங்களிலும் பரவவும், கிறிஸ்தவர்களாகிய உமது சகோதரர்கள் உத்தம விசுவாசிகளாய்த் திருச்சபையில் நிலைத் திருக்கவும், பதித மதம் நாளுக்கு நாள் குறைந்து போகவும், உமது வாழ்நாளில் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துநாதருடைய திருநாமம் எங்கும் ஓங்கவும், அவருடைய திருச்சபை பெருகவும், நீர்கொண்ட முயற்சி நாங்கள் கொள்ளவும், உம்மைப்போல எவ்வித வருத்தமும் உயிர்வதை நேர்ந்தாலும் பின்னடையாதிருக்கவும் சீவியத்தி லுண்டாகும் கஷ்டம் துன்பம், சோதனைகளை வெல்லவும் தேவ கிருபையை மன்றாடியருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்.
வானுலகில் முடிசூட்டப்பெற்ற புனித ஜார்ஜியாரே! உமது அடியவர்களாகிய நாங்கள் மென்மேலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் திழைத்து நிற்கவும், இம்மாய உலகில் ஆன்மீகத் துறையிலும் பிற துறைகளிலும் எங்கள் எதிரிகளால் ஏற்படும் சோதனைகளை விலக்கி, தூய மனத்தோராய் இவ்வுலகில் வாழ வரம் அருள்வீராக...
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
இரக்கமுள்ள இறைவா, உமது புனித ஜார்ஜியார் வழியாக இவ்வரங்களை தந்தருள்வீராக.!
ஆமென்.
முதல் : வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே..!
எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
(3. முறை சொல்லவும்.)
- ஒரு. பா. அரு. பிதா.
🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
*புனித ஜார்ஜியாரிடம் மன்றாட்டு*
🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
அனைத்திற்கும் ஆதாரமாக இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ளவருமாய், கிறிஸ்தவ நெறிகளுக்கு காவலருமாய், எங்களுக்கு துணையும் பாதுகாவலருமாய் எங்கள் நடுவே எழுந்தருளி இருக்கும் புனித ஜார்ஜியாரே!!!
நீர், கடவுள் மேல் உண்மையான நம்பிக்கையும், அன்பும் கொண்டதால் அவர் உம்மேல் அன்பும் கருணையும் இரக்கமும் காட்டினாரே...
மனிதரை கொன்று தின்று வந்த நாகப்பறவை வடிவில் உள்ள அசுத்த ஆவியை வெண் குதிரையின் மேல் அமர்ந்து ஈட்டியால் குத்திக் கொன்று, வெற்றிமாலை சூடினீரே...
தியோக்கிலேசியனின் கட்டளைகளுக்கு அஞ்சாமல் கிறிஸ்தவத்தை எல்லா மக்களுக்கும் அறிவித்தீரே....
மன்னனின் கொடிய கட்டளைகளை விசுவாசம் என்னும் சம்மட்டியால் அடித்து நொறுக்கி மன்னனால் மூன்று முறை கொல்லப்பட்டு, கடவுளின் அருளால் மும்முறையும் உயிர்பெறவும் வரம் பெற்றீரே!!!!
நீர் விண்ணரசு போய் சேரும் காலம் நெருங்கி வரவே தியோக்கிலேசியன் உமது தலையை வெட்டவும், உமது ஆன்மாவை வானதூதர்கள் புடைசூழ திருக்கரங்களில் ஏந்தி கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கவும், விண்ணரசில் வேதசாட்சி முடிசூட்டப்படவும், அன்று முதல் இன்றுவரை உமது கல்லறையைத் தேடி வருபவர்கள் புதுமைகள் பெற்று வரவும் கிறிஸ்துவினால் வரம் பெற்றீரே!!!!
ஓ! எங்கள்மேல் அன்பும் இரக்கமும் கொண்டு எங்கள் நடுவே இருக்கும் புனித ஜார்ஜியாரே!
நாங்கள் கிறிஸ்துவில் நம்பிக்கையோடு வாழவும் எங்களுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்தும் பஞ்சம், பசி, தீய ஆவியின் செயல் பாடுகளிலிருந்தும் எங்களை காப்பாற்றும்...
நாங்கள் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து சீரும் சிறப்புமாய் வாழவும், கடல் கடந்தும், வெளியூர்கள் சென்று தொழில்கள் செய்து வரும் உமது மக்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழவும்,இறுதி திருவருட்சாதனம் பெற்று விண்ணரசின் மகிமையை உம்முடன் சேர்ந்து கண்டடைய, உமது திருப்பாதத்தில் மண்டியிட்டு வேண்டுகிறோம்...
தஞ்சம் என்று உமது உறைவிடத்தை தேடி வந்தோம்.
இரக்கத்துடன் எங்களைப் பாரும்!
கருணைக் கடலே!!!!!,
தவிப்பவர்களுக்குத் தடாகமே!!!!!!
தணித்தவர்க்கு தஞ்சமே!!!!!!!!
உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்.
வறுமை, நோய் முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
உமது திருசுரூபத்தை பார்த்து ஆறுதல் அடைய முழு நம்பிக்கையோடு ஓடி வந்தோம்.
எங்கள் நம்பிக்கை மறுக்கப்படுமோ!...
எங்கள் யாத்திரை பலனற்றதாய் போகுமோ!...
நீர் ஞானத் தந்தை என்பதை எங்களுக்கு காண்பியும்....
தாய் தன் பிள்ளையை மறந்தாலும், மக்களை மறக்காத இறைவனிடத்தில் நாங்கள் கேட்கும் செபங்களைக் கேட்டு தயவாய் எங்களுக்கு தாரும்.
...............................................
*(தேவைகளை கேட்கவும்)*
நாங்கள் உமது வழியாய் இறைவனிடம் கேட்கும் வேண்டுதல்களை நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாம் வல்ல நம் இறைவனிடம் எங்களுக்காக மன்றாட வேண்டுமென்று உம்மை பார்த்து கெஞ்சி கேட்கிறோம்.
*🙏🏻ஆமென்🙏🏻*
🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿
*புனித ஜார்ஜியாருக்கு புகழ்மாலை*
🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿🍄🌿
சுவாமி கிருபையாயிரும்...
கிறிஸ்துவே கிருபையாயிரும்...
சுவாமி தயவாயிரும்...
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்...
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்...
பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவாகிய சர்வேசுரா..
எங்ககளை தயைபண்ணி இரட்சியும் சுவாமி..
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி- - -
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா
- எங்களை தயைசெய்து இரட்சியும் சுவாமி...
தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா
- எங்களை தயவுசெய்து இரட்சியும் சுவாமி..
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
வேதசாட்சியான புனித ஜார்ஜியாரே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
பால வயதிலேயே தெய்வ பக்தி உள்ளவரான புனித ஜார்ஜியாரே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
பால வயதில் உரோமை தியோக்கிலேசியான் இராஜனின் இராணுவத்தில் படை சேவகனாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
தெய்வ சித்தமென்று கீழ்ப்படிதலோடு அவ்வேலையில் அமர்ந்தவரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். .
ஏழை எளியவர்மீது இரங்கி அன்பாய் அவர்களுக்குத் தானதர்மம் செய்தவரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
சீவிய காலத்தின் பேரின்பம், கிறிஸ்துநாதரில் சிநேகமென்று முழுமனதோடு விசுவசித்து இடைவிடாமல் அவரை மன்றாடினவரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
துன்ப சோதனை வேளையில் தமக்கு உதவி ஒத்தாசை செய்ய வேணுமென்று புனித தேவமாதாவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
உமது பக்தி, பிறர் சினேகம் கீழ்ப்படிதலைக் கண்டு அதிகமாகச் சர்வேசுரனால் சினேகிக்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
உமது திறமை சாமர்த்தியம் புத்திமதியைக் கண்டு அரசனால் உம்மை இராஜ தோழனாகவும் சேனாதிபதியாகவும் ஆலோசனைச் தலைவரில் ஒருவராகவும் சேர்க்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இந்த மேலான பதவி உமக்குக் கிடைத்தாலும் அதைப் பெருமையாக எண்ணாமல் அதை உமக்கு அருளிய இயேசுநாதருக்கே பெருமையும் மகிமையும் வணக்கமும் உண்டாகக்கடவது என்று வேண்டிக்கொண்டவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்......
சைலானாவென்னும் இடத்தில் கொடிய பறவைநாகத்தை உமது கை வேலால் குத்திக்கொன்று ஆண்ட்ரோமேடா என்னும் இராஜகுமாரியைத் தற்காத்து அவள் தந்தையான இராஜனையும் மற்றவர்களையும் வேதத்தில் சேரச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஆலோசனை சபையில் கொடுங்கோலனான தியோக்கிலேசியான் கிறிஸ்தவர்களைப் பிடித்து அடித்து உபாதித்து வேதத்தை விடச் செய்ய வேண்டுமென்றபோது தைரியமாய் எதிர்த்துப் பேசினவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
இராஜ சிநேகத்துக்காகவும் உலக மகிமைக்காகவும் உத்தியோக பெருமைக்காவும் தேவனாகிய இயேசுக்கிறிஸ்துவை மறுதலிப்பது கொடும் பாதகமென்று, இராஜ சமூகத்தில் புத்தி போதித்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
தியோக்கிலேசியான் இராயன் தான் வணங்கி வந்த அப்பெல்லோவென்னும் பசாசை வணங்க வேணுமென்று கட்டாயம் செய்தபோது சரியான நியாயம் பேசி அரசன் அடக்கினவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
தன்னுடைய சொற்படி அப்பெல்லோவென்னும் பேய்க்கு ஆராதனை செய்யவில்லை என்று அரசனால் சிறையில் அடைக்கப்பட்டவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
சிறைச் சாலையிலிருந்து திவ்விய இயேசுவை மன்றாடும்போது உம்மைப் பார்க்க வந்த முகப் பழக்கமுள்ள அஞ்ஞானிகளுக்கு சத்திய சுவிசேஷத்தை உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
உம்முடைய உபதேசத்தைக் கேட்டு அனேகர் வேதத்தில் சேருவதை அறிந்து உம்மை கம்பத்தில் கட்டி சாட்டை கசைகளால் அடிக்கவும் அடங்காப் புரவியின் கால்களில் கட்டி தெரு வீதியில் இழுக்கவும் இராயன் உத்தரவளித்தபடியே சேவகர் செய்வதை எல்லாம் பொறுமையாய் அனுபவித்த வரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
தேகமெல்லாம் இரத்தம் வடிந்து களைத்திருக்கும் வேளையில் இருட்டறையில் போட்டபோது, சம்மனசுகளினால் காயமெல்லாம் சுகப்படுத்தப்பட்டவரான புனித ஜார்ஜியாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இந்த அற்புதத்தைக் காவல் சேவகர் கண்டு ஆச்சரியப்பட்டு வேதத்தில் மிகவும் மனம் மகிழ்ந்தவரான புனித ஜார்ஜியாரே..
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
இராயன் உமக்கு நேசங்காட்டி மயக்கப் பார்த்தபோது அவனை அப்பெல்லோவின் விக்கிரகங்களுக்கு முன் அழைத்துக் கொண்டு போய் அதிலிருந்த பசாசைக் கொண்டே நீர் வணங்கும் கிறிஸ்துவே உண்மையான தெய்வமென்று பேசச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
நீ உடனே நீர் அகமகிழ்வோடு, அந்த விக்கிரகங்களை நோக்கி தெய்வம் இல்லை என்றால் ஏன் இதிலிருக்கிறாயென்று சொல்லி அர்ச்சியஷ்ட சிலுவை வரைந்தவுடன் விக்கிரகமெல்லாம் கீழே விழுந்து நொறுங்கவும், பசாக அழுது அலறிக்கொண்டு ஓடச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற சனங்கள் கிறிஸ்துவே மெய்யான தேவனென்று வணங்கி ஞானஸ்நானம் பெறச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
இராயனும் அஞ்ஞான பூசாரிகளும் இதைக்கண்டு வெட்கி தலை கவிழ்ந்துபோகச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
அஞ்ஞான பூசாரிகள் இவன் மந்திரத்தினால் இவையெல்லாம் செய்கிறாளொன்று சொல்லக்கேட்டு இராயனால் மந்திரவாதியைக் கொண்டு மாய மந்திரத்தினால் உம்மை வசப்படுத்தப் பார்த்தும் முடியாமல் அவர்களை வெட்கமடையச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
மந்திரவாதி, நீர் வணங்கும் இயேசுவே உண்மையான தெய்வமென்று விசுவசித்து, மன்றாடினதால் அவனை வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
இரக்கமற்ற இராயன் இரும்புச் சீப்பால் உமது தேகமெல்லாம் கீறி கழுமரத்தில் தூக்கிக் கொலைசெய்து ஒரு பெரும் பள்ளத்தில் எறியச் செய்த பின்னும் உயிர் பெற்றவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
உம்மைக் கழுமரத்தில் தூக்கி கொலைசெய்து விட்டோமென்று சேவகர் சொல்லக் கேட்ட அரசன் சந்தோஷமாயிருக்கையில், தெருவில் உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
ஒரு நிர்ப்பாக்கிய விதவையின் மகனின் மாடுகளிலொன்று மரித்துப் போகவே அதற்கு உயிர்கொடுத்து தாயையும், மகனையும் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
தியோக்கிலேசியான் பின்னும் கோபம் கொண்டு தீச்சூளையில் மிகுதியாக நெருப்புண்டாக்கி அதனருகே மூன்று நாள் போடச்சொல்லி, சேவகர் அவ்விதம் செய்தும் யாதொரு மோசமின்றி காப்பாற்றப்பட்டவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
பின்பு அரசன் உமக்கு ஆகாரம் கொடாமல் வழியோரத்தில் நின்ற பட்டமரத்தில் கட்டி அடிக்க சொல்லியபடி செய்யும் போது அற்புதமாய் பச்சை உண்டாக்கி தளிர்த்து பூத்துக் காய்த்துப் பழுத்திருக்க தேவ வல்லமையால் அற்புதஞ் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
அந்த மரத்தடியில் குடியிருந்த ஏழை கைம்பெண்ணின் மகனுக்குண்டாயிருந்த பலவீனம் செவிடு, குருடு, ஊமையையும் போக்கி இருவரையும் வேதத்தில் சேர்த்தவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
அவ்வழியே சென்ற தியோக்கிலேசியான், பட்ட மரம் தளிர்த்து அலங்காரமாய்ப் பலன் கொடுத்திருப்பதைக் கண்டு வெட்கி நாணமடையச் செய்தவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
நிஷ்டூரனான தியோக்கிலேசியான் அந்த மரத்தை வெட்டி அதோடு உம்மை அலையிற் கொண்டு சுட்டெரித்துப் போட சொன்னபடியே செய்தும், மீண்டும் தேவ கிருபையால் உயிர்பெற்றவரான புனித ஜார்ஜியாரே.....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
அவ்விடத்திலுண்டான பூமி அதிர்ச்சி, மின்னல், இடி, குமுறல் கண்டு நடுநடுங்கி சேவகர் நாலுபேர் பயந்து ஓடோடி போகும் போது பின்னால் நடந்துவந்து நில்லுங்கள் நில்லுங்கள் என்று சொன்னவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
சேவகர் கண்டு பயந்து ஆச்சரியப்பட்டு இயேசு கிறிஸ்துவே உண்மையான தேவனென்று விசுவசித்து சத்தியவேதம் சேர்ந்ததால் அதிக ஆனந்தமடைந்தவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
அசரிரி திருவசனத்தால் மகிழ்ந்தவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
கொடிய அரசன், உம்மை சக்கரத்திலிட்டு அரைத்து கொப்பறையில் உருக்கிய ஈயம் குங்கிலியம் கெந்தகத்திலிட்டு பூமியில் புதைக்கச் செய்தபின்னும் உயிர் பெற்றவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
அரசன் கொடுத்த விருந்தருந்திய கூட்டத்தில் பிரவேசித்து அவர்களுக்கு உபதேசித்தவரான புனித ஜார்ஜியாரே....
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
மரித்த நீர், உயிரோடெழுந்து வந்து அங்கே பிரசங்கித்ததைக் கேட்டு அனேகர் ஆச்சரியப்பட்டு வேதத்தில் சேரச் செய்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
மூன்றுமுறை மரணமடைந்த பின்னும் உயிர்பெற்ற வரானதால் எல்லோராலும் புகழ் வரம் பெற்றவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
கடைசியாய் உம்மை பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ள திருச்சித்தமாகவே தலை வெட்டுண்டு மரித்தவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
உம்மை அண்டியவர்களுக்கு அநேகம் அதிசயங்கள் நடத்தியதால் அற்புதவரம் உடையவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
உம்மை மன்றாடுகிறவர்களுக்கு உதவிபுரிகிறவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
பற்பல துன்ப சோதனைகளை அகற்றுபவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
தீராத நோய்களைத் தீர்ப்பவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
மனக்கவலையை ஒழிப்பவரான புனித ஜார்ஜியாரே....
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....
கபடமற்ற தளமாய் உம்மிடத்தில் கேட்பதெல்லாம் தேவகிருபையால் கொடுப்பவரான புனித ஜார்ஜியாரே...
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேகரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே...
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
- எங்கள் பிராத்தனையை கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாலங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செப்பறிப் புருவையாகிய இயேசுவே
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
*🙏🏻செபிப்போமாக🙏🏻*
கிருபை நிறைந்த சர்வேசுரா சுவாமி! தேவரீர் புனித ஜார்ஜியாருடைய நம்பிக்கை, வேண்டுதல், பக்தி முயற்சியாலும் அநேகரை வேதத்தில் சேர்ப்பித்து மும்முறை மரித்து பின்னும் அவரை உயிர்ப்பித்து வேதம் போதிக்க அருள்புரிந்தீரே! நாங்களும் இப்பூமியில் உயிரோடிருக்கும் மட்டும் சுத்த வழியில் நடக்கவும், திருச்சபைக்காக உழைக்கவும், கருணை நிறைந்த தேவரீரால் இக பரலோக நன்மைகளை அடையவும், எச்சோதனை நேர்ந்தாலும் உம்முடைய திருவடியில் தைரியமாய் நிலைத்திருக்கவும் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் உம்முடைய திருக்குமாரன் இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி...
*- ஆமென்🙏🏻*
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்