Arun
368 views
#📸பக்தி படம் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் ஓதுவோம்* *திருமுறை ஓதுவிப்போம்* *தினம் ஒரு தேவாரம்* *🌹திருமாகறல்🌹* 🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹 `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான் கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.* *சித்தமெல்லாம்* *சிவ மயமே.*