sivasenthil
526 views
1 days ago
*தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குவது நல்லது...* நாம் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்துவிட்டு இரவில் தூங்க செல்லும் போது, பல்வேறு திசைகளில் தூங்குவது வழக்கம். அப்படி உறங்கும் போது, சில நேரம் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கான காரணம் என்ன என்று நீங்கள் என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா..? எனவே ஒருவர் தூங்கும் திசையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, நீங்கள் குப்புற படுத்து, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குவதை வலது புறம் படுத்து தூங்குவதை காட்டிலும் இடது புறம் தூங்குவதால் பல்வேறு நன்மைகள் வந்து சேருபற்றிய விரிவான தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் ஏன் ஒருவர் இடது புறமான படுத்து தூங்க வேண்டும்: இடது பக்கமாக தூங்குவது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிப்பதாக இருக்கும். இடது பக்கத்தில் தூங்கும் போது, இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கும். நீங்கள் இடது புறமாகத் தூங்குவது கழிவுகளை சிறுங்குடலிலிருந்து பெருங்குடலுக்கு எளிமையாக நகர அனுமதிக்கிறது. இது சிறந்த செரிமானவிளைக்கிறது. நீங்கள் மல்லாந்து படுக்கும் போது, குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். அதுவே நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இடதுபுறமாக படுத்திருப்பது மார்பு குழாய்கள் உடலுக்கு நச்சுகள், கழிவுகள் மற்றும் நினநீர் திரவத்தை வடிகட்ட கழிவுகள்போதுமான நேரம் அளிக்கிறது. பெரும்பாலும், இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல் பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, இடது பக்கத்தில் தூங்கும் ஒருவருக்கு, நெஞ்சு எரிச்சல் உணர்வு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். இடதுபுறமாக படுத்திருப்பது கர்ப்பிணி பெண்களுக்கு கருவுக்கு உகந்த ரத்த ஓட்டம், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆகியவற்றிக்கு பயனளிக்கிறது. உங்கள் இடது பக்கமாக தூங்குவது உங்கள் இதய ஆரோக்கியம், மண்ணீரல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்தும், முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்கிறது மற்றும் உங்கள் முதுகுத் தண்டு அழுத்தத்தையும் நிவாரணம் செய்கிறது. எனவே, இடது பக்கமாக தலையை சற்று உயரமாக வைத்து தூங்குங்கள். ஏனென்றால் இந்த நிலை ஈர்ப்பு விசை வேலை செய்ய அனுமதிக்கும். எனவே, இனிமேல் எப்போதும் தூங்கும் போது இடது பக்கமாக திரும்பி தூங்க வேண்டும். #🙏ஆன்மீகம்