மங்கோலியா ஒரு நிலப்பரப்பால் சூழப்பட்ட (Landlocked) நாடு. சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே சிக்கியுள்ளது...
தற்போது மங்கோலியா தனது பெட்ரோலியத் தேவைகளுக்கு 100% ரஷ்யாவையே நம்பியுள்ளது...
மங்கோலியாவில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது, ஆனால் அதைச் சுத்திகரிக்க வசதி இல்லாததால் இதுவரை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது...
இங்கே தான் மங்காத்தா அஜீத் போல பாரதம் என்ட்ரி ஆகிறது...
உன்னிடம் தான் கச்சா எண்ணெய் வளம் இருக்கிறது வா உனக்கு சுத்திகரிக்க உதவி செய்கிறேன் பெருளாதாரத்தில் முன்னேறு என்னுடைய தொழில்நுட்பத்தை தருகிறேன் சேர்ந்து வளர்வோம் என்றது...
இதுவரை கச்சா எண்ணெயை ஆட்டைய போட்ட சீனாவை போல் அல்லாமல் அங்கயே சுத்திகரிப்பு ஆலையை அதாவது "மங்கோல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை" Mongol Refinery அமைக்க சுமார் ₹14,000 கோடி மதிப்பிலான குறைந்த வட்டி கடனுதவியை (Line of Credit) வழங்கியதோடு அல்லாமல் இந்தியாவின் Engineers India Limited (EIL) மற்றும் Megha Engineering (MEIL) நிறுவனங்களை கொண்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.
மங்கோலியாவின் டோர்னோகோவி (Dornogovi) மாகாணத்தில் உள்ள அல்தான்ஷைரீ (Altanshiree) என்ற இடத்தில் உருவாகி வருகிறது...
ஆண்டுக்கு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் அதாவது ஒரு நாளைக்கு 30,000 பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக அமைகிறது...
இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, நாட்டின் உள்நாட்டு எரிபொருள் தேவையில் சுமார் 70% முதல் 75% வரை இதிலிருந்தே கிடைக்கும்.
தனது சொந்த எண்ணெயை அங்கேயே சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக மாற்ற முடியும்.
பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அந்த நாடு செலவிடும் பெரும் தொகை மிச்சமாகும். இது அந்நாட்டின் நாணய மதிப்பை நிலைப்படுத்த உதவும்.
இந்த ஆலை அந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது...
இப்போதே இந்த ஆலையைச் சுற்றி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துணைத் தொழில்கள் (Auxiliary Industries) வளர்ந்து வருகிறது .
சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இந்தியப் பொறியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலை செயல்பாட்டுக்கு வந்ததும் நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2028-ம் ஆண்டிற்குள் இந்த ஆலை முழுமையான உற்பத்தி நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மங்கோலியாவிற்கு இது வெறும் ஆலை மட்டுமல்ல, அது அவர்களின் பொருளாதாரத் தன்னுரிமைக்கான அடையாளம்...
இந்தியா மற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டாமல், அவர்களுக்குக் கடனுதவி அளித்து, தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தற்சார்பு அடையச் செய்வதால், ஒரு "விஸ்வகுரு" வாக பார்க்கபடுகிறது பாரத தலைவன் மோடியை பிதாமகனாக பார்க்கிறது ...
#modi #India
#🚨கற்றது அரசியல் ✌️ #🔶பாஜக #🙏என் தேசப்பற்று #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்