🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹திருமந்திரம்🌹🙏*
*☀️திருமுறை🔟☀️*
*🦚பாடல்:2722///3000🦚*
`மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா`
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
🌹எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
🌹எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
🌹தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*எங்கும் நிறைந்துள்ளது சிவன் வடிவம்; எங்கு நிறைந்துள்ளனர் சிவசக்தியர்; எல்லா இடங்களும் சிதம்பரம்; எங்கு நோக்கினும் திரு நடனம்; எங்கும் உள்ளான் சிவன், எல்லாம் அவன் அருள்; நிகழ்பவை எல்லாம் அவன் அருள் விளையாட்டு!*
`எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!`
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌼🌸திருமூலர்🌸🌼*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
#🙏ஆன்மீகம்