sivasenthil
711 views
2 days ago
🔥🙏🏾🕉️ #தினம்_ஒரு_திருமந்திரம் #பாடல் #1355: #நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்) தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரி காலது கொண்டு கருத்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமுங் கேடில்லைக் காணுமே. 🙏🏾 #விளக்கம்: பாடல் #1354 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறி இருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்கும் தலைவியாக அந்த இறைவியே இருக்கிறாள். அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜ மந்திர எழுத்துக்களை மூச்சுக் காற்றின் மூலம் அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும் சேர்ந்து அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது அந்த அதிர்வலைகளால் தினந்தோறும் பல விதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதை சாதகர்கள் காணுவார்கள். அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கும் எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும். ஓம் நமசிவாய சிவாய ஓம் 🔥 #🙏ஆன்மீகம்