🍫 Chocolate 🍫
563 views
26 days ago
மம்மி படம் உங்களுக்கு பிடிக்கும்னா இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும். 2025 வருடத்தில் ஆரம்பத்தில் வெளி வந்த படம் the gorge படத்தோட ஆரம்பத்தில் ஸ்நைப்பர் சூட்டரான ஹீரோவை ஒரு இடத்துக்கு வேலைக்கு அனுப்ப ஒப்பந்தம் போடுறாங்க. ஒப்பந்தத்தில் முக்கிய கேள்வி "நீங்க செத்துட்டா யாரும் கஷ்டப்படமாட்டாங்களே?" ஹீரோ சொல்வார் "செத்துட்டா அழக்கூட ஆள் இல்லை சார்" அப்ப நீ செலக்ட்னு சொல்லி அவரை எங்க கூட்டிட்டு போறோம்னு சொல்லாமலே ஒரு இடத்துக்கு கூட்டி போறாங்க. அங்க பெரிய பள்ளத்தாக்கு இருக்கு. இரண்டு பக்கமும் பெரிய வாட்ச் டவர் இருக்கு. அங்க ஏற்கனவே இருக்கிற ஆள் "நீங்க வரத்தான் காத்திருந்தேன். ஒரு வருசமாச்சு வெளி உலகத்த பார்த்து யாரிடமும் பேசி . நான் கிளம்புறேன். இங்க சரக்கு சைடிஸ் எல்லாம் இருக்கு. பேசத்தான் யாருமில்லை. எதிரில் உள்ள டவரில் ஆள் இருப்பாங்க ஆனா அவங்க கூட பேசக்கூடாது. இப்ப நீ வந்த மாதிரி சரியா ஒரு வருசம் கழிச்சு உனக்கு பதிலா ஒருத்தன் வருவான் . அப்ப நீயும் உன் வீட்டுக்கு போகலாம்" என சொல்லிட்டு கிளம்புறான். "அப்ப எனக்கு என்ன வேலை?"னு ஹீரோ கேட்க "அந்த பள்ளத்தாக்கு உள்ள இருந்து எதுவும் மேல வரக்கூடாது. வந்தா சுட்டுரு. அதான் வேலை" அப்படினு சொல்லிட்டு போயே போயிடுறான். பள்ளத்தாக்குல இருந்து என்ன மேலே வரும்? ஏன் எதிரில் இருக்க ஆள்கிட்ட பேசக்கூடாது? பல பல கேள்விகள் ஹீரோவுக்கும் நமக்கும். அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கு விடை சொல்லி இருப்பார்கள் . ஸ்லோ டிராமாவாக ஆரம்பிச்சு, அப்படியே ஹாரர் ஆக மாறி சைன்ஸ் பிக்சனாக மாறி கடைசியில் ஆக்சன் அட்வென்சர் படமாக முடியும். ஒரே படத்துல இத்தனை ஜோனரா? அப்படினு ஆச்சரியம்தான் எனக்கு. லாஜிக் பாக்காம பார்த்தா படம் மேஜிக்தான். மிரட்டலா இருக்கும். குடும்பத்தோட பார்க்க முடியாது. ஒரு சில கசமுசா உண்டு. மத்தபடி தரமான பொழுது போக்கு படம். பெரிய ஸ்கிரீன்ல பார்த்தா செமயா இருக்கும். அமெசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி என இரண்டு ஓடிடி யிலும் இருக்கு. தமிழ் டப்பிங் உண்டு. #movie #horror movie #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌙இரவு வணக்கம்