#அரசியல்களம்
#தலைவர்
தலைவர் வந்து
போகும் வசதிக்காக
சந்து பொந்து அடச்சி
வச்சோம் சாலையில்.
ஒருமுறை மட்டுமே
பயன்படும் பொருளுக்கு
பல லட்சம் செலவு செய்து
வாங்கி வச்சோம் மேடையில்.
மண் பட்டால்
புண்ணாகி விடும்
என்று பாதம்.
பூ போட்டு வர வேற்றோம்
நாமும் நமக்கு நாமம்..
தாலி விற்றுக் கொடி
கட்டுவான் சாலையில்.
தன் தாயின் சேலை
கந்தல் என்பதை மறந்து.
மலர் பாய் விரிப்பில்
தலைவரின் பாதம் புரளும்.
வறுமையால் ஏழைகளின் வயிற்றில் குடல்
புரளும் பசியால்..
பசியாற பாலின்றி கதறும்
ஏழைக் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்ட பால்.
குடம் குடமாய் தலைவரின் பாதாகையில் ஊற்றப்படும்.
மாசுக்கட்டுப்பாட்டு துறையை
வரவேற்க மாசுபடும்
பட்டாசுகள் வெடிக்கப்படும்..
அலங்கார ஆடம்பரம்.
ஆங்காங்கே ஆடல் பாடல். தலைவர் எப்போ வருவார்
என்று மக்களின்
தேடல் தேடல்....
தேடித்தேடி விழிப்பூக்கும்
மனசோ திட்டி தீர்க்கும்
எப்படா வருவான் என்று..
வாங்கிய காசுக்கு
வேதனை போதுமா என்று.
அவசர அவசரமாய்.
வெள்ளை கூட்டம் ஓடிவரும்.
வழிவிடு வழிவிடு என்று..
தலைவர் வந்துவிட்டார்
என்று அறிந்து விரிந்து
கிடந்த கூட்டம் முட்டி
மோதி அலைமோதும்...
அரை மாத
உழைப்பின் மேடையில்
ஆறு நிமிடம் பேசிவிட்டு சென்றுவிடுவார் தலைவர்..
வறுமையில் வாழும் மக்கள் கையேந்தி காத்து கிடப்பார் கூட்டத்திற்கு வந்த
கூலியை கேட்டு....
ஆளைப் பார்த்து
பணம் பிரியும்
கேட்பாராற்றவனுக்கு
அதுவும் இல்லை என்று
விரட்டி அடிக்கும் .
முன்னே நிற்பவன் தின்னமீதியில்....
நொடிகள் பேசுவதற்கு,
கோடிகள் செலவு செய்த
தலைவன் பேசுவார்.
வறுமையை ஒழிப்போம்
வாருங்கள் என்று...
#அரசியல்