Devarajan Rajagopalan
820 views
28 days ago
மதச்சார்பற்ற பொதுச் சட்டத்தில் Secular Civil Code (formerly Uniform Civil Code) முதல் வெற்றி. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வழக்கொழிந்து, காலாவதியான பழைய சட்டங்களை நீக்கியுள்ளனர். இதில் முக்கியமாக 1925 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொண்டு வந்த "இந்திய வாரிசுரிமைச் சட்டப்பிரிவு 57 (a) & (b)" யை நீக்கியுள்ளனர். இந்தச் சட்டம் ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்களுக்கும் மட்டுமே ஒரு சுமையாக இருந்து வந்தது. மெட்ராஸ், பம்பாய், வங்கம் ஆகிய பகுதிகள் (a) பிரிவிலும், இந்தியாவின் பிற பகுதிகள் (b) பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள மதத்தவர்கள் அசையா சொத்தின் மீது உயில் (Will), துணை உயில் (Codicil) எழுதினால் அதனை நீதிமன்றத்தில் அலுவலகச் சான்றிதழாக வாங்கினால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்று சட்டம் இருந்தது. இதனை இப்போது நீக்கியுள்ளதால், இந்தியாவில் உள்ள பிற மதத்தினருக்குக் கிடைத்த சலுகை பெரும்பான்மை சமூக மக்களுக்கும் கிடைத்துள்ளது. அவர்கள் வாழ்க்கையும் எளிதாக மாறும். சொத்துப் பிரச்சனை சார்ந்த குடும்ப வழக்குகள், குழப்பங்கள், நீதிமன்ற அலுவல்கள், வாய்தா, அலைச்சல் ஆகியவை இதன் மூலம் பெருமளவு குறையும். மிக முக்கியமான ஒரு சட்டத்திருத்தத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி மத்திய அரசு நடத்திக் காட்டியுள்ளது பாராட்டத்தக்க அம்சம். ஆனால் இதற்கே இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதை நாம் உணர வேண்டும். #Will #IndiainSuccessionAct #Brahmin_Political_Party #🔶பாஜக #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க