*மறைசாட்சி புனித தேவசகாயத்திடம் வேண்டும் ஜெபங்கள். மற்றும் 9மன்றாட்டுக்கள்.*
🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿⚜️🌿
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
*1.மறைசாட்சி புனித தேவசகாயத்திடம் ஜெபம்*
⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺⚜️🌺
புனித தேவசகாயமே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தமிழகத்தின் தென் கோடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு... இயேசுவை அதிகமாக அறிவிக்கப்படாத காலத்தில், இயேசுவை அதிகமாக அறிந்து, அன்பு செய்து ,கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்த புனித தேவசகாயமே...
நாங்கள் உம்மை போல் வேதசாட்சியாக மரிக்காவிட்டாலும் ,நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்து மரிக்க எங்களுக்காக பரிந்து பேசும்.
கிறிஸ்துவ வாழ்க்கை வாழ எங்களுக்கு தடையாக இருக்கும் எங்கள் பாவங்களை மன்னித்து...
இயேசுவின் சொந்த பிள்ளைகளாக வாழ எங்களை ஆசீர்வதியும்...
*🙏🏻ஆமென்🙏🏻*
🌹(1பர 1அருள்..பிதா...)🌹
⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻
*2.மறைசாட்சி புனித தேவசகாயம் செய்து வந்த செபம்*
⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻⚜️🙏🏻
நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே!
மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே!
உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.
தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன்.
எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.
திருக்கண்ணி மரியின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே!
உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும்.
நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.
சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!
– *🙏🏻ஆமென்🙏🏻*
👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹
*3.மறைசாட்சி புனித தேவசகாயத்தை நோக்கி நவநாள் செபம்*
👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹👑🌹
உம்மைத் தேடிவந்து வாடிநிற்கும் மக்களை தயவாய்க் கரம் பிடித்து காக்கும் புனித தேவசகாயமே! அதிகமானத் துன்பங்களையும் மனதுயரங்களையும் ஏற்று மக்களின் குறைதீர்க்கும் வரம் பெற்ற வள்ளலே! உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இறைவன் உமக்கு மறைசாட்சி புனிதர் என புனித மகுடம் கொடுத்து அலங்கரித்ததற்காக அவருக்கு நன்றியுடன் கூடிய புகழ் செய்கிறோம். அதிசயங்களின் ஆலயமே! உம்பாதம் பட்டவுடன் பட்ட மரங்களெல்லாம் புதுப்பொலிவுடன் துளிர் விட்டதுவே! பாறையும் நீர் ஊற்றியதுவே! உம் வல்லமை மிகுந்த செபத்தால் எமக்கு வேண்டிய வரத்தை நீர் பெற்றுத்தருவீர் என்று எமக்குத் தெரியும். உமக்கும் வாழ்வின் வழியுமாயிருக்கிற எம் இறைவனுக்கும் சித்தமானால்....
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்) .....
இந்த வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுகிறோம்.
- 3 பர அருள் பிதா
*⚜️செபிப்போமாக!⚜️*
எல்லாம் வல்ல இறைவா! உம் ஊழியர் புனித தேவசகாயத்தின் மனமாற்றத்தாலும், உறுதிகலந்த போதனையாலும், அழியா அற்புதங்களினாலும் பல தரப்பு மக்கள் உம் திருமகன் இயேசு நிறுவிய திருச்சபைக்கு வர சித்தமானீரே! அவருடைய பாதையைப் பின்பற்றி உறுதியான விசுவாசத்துடனும், உமது பிள்ளைகளாய் உம்மை எதிரொலிக்கும் ஊடகமாக நாங்கள் இருக்க அருள் புரிந்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி - ஆமென்.
முதல் : இயேசுகிறிஸ்து திருவாக்குத்தத்தங்களுக்கு நாதருடைய நாங்கள் தகுதியுள்ளவர்களாகும் படிக்கு...
துணை : கரம் பிடித்து காக்கும் மறைசாட்சி புனித தேவசகாயமே..
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
*🙏🏻ஆமேன்.🙏🏻*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
*4.மறைசாட்சி புனித தேவசகாயம் வழியாக கேட்கும் ஒன்பது மன்றாட்டுகள்*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
1. நல் ஞானம் பெற்று இளவயதில் நல்லதை தேர்ந்து தெளிந்து கிறிஸ்தவ மதம்மாறி "கிறிஸ்தவர் களுக்காகவும் கிறிஸ்தவ மறைக்காகவும் தான் துன்பப்பட தயார்" என அரசவை பணியை விட்டு மறைசாட்சிகளின் பாதையைத் தேர்ந்த மறைசாட்சி புனித தேவசகாயமே! உலகத் திருச்சபையையும், நாட்டை வழிநடத்தி வரும் தலைவர்களையும், பொது நிலையினர்களையும் இறைவன் இதயத்தில் வைத்துக் காத்து பராமரித்து பாதுகாத்து வழிநடத்திட நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர.அரு. பிதா..*
2. அஞ்சா நெஞ்சத்துடனும், உறுதியான விசுவாசத்துடனும் குற்றவாளியாக்கிய அரசர் முன்னிலையிலும், கொடுமைப்படுத்திய விசாரணை அதிகாரிகள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் முன்னிலையிலும் வேதத்தைப் போதித்து பலரும் மறையைத் தழுவக் காரணமான மறைசாட்சி புனித தேவசகாயமே! துன்ப சோதனைகளிலும், வருத்தங்களிலும் நாங்கள் உறுதியாய் இருந்து உண்மைக் கடவுளுடன் ஒன்றித்து, திருச்சபையின் உண்மை மக்களாக வாழ, நீரே இறைவனை மன்றாடும்படி உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
3. நீர் துன்பத்திலிருந்த போதும், நோயினால் வேதனைப்பட்ட போதும், சிறையில் தனிமைப் படுத்தப்பட்டபோதும் தியானித்து, தமக்காக வேண்டுமாறு கேட்ட மக்களுக்குப் போதித்து, அவர்களின் பிணி அகற்றி, துன்பம் துடைத்து, அருள்வரம் பொழிந்த மறைசாட்சி புனித தேவசகாயமே! நோய் நொடியினால் அல்லல்பட்டு, அமைதியிழந்து அலையும் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி அமைதி மனத்தையும், அர்ப்பண வாழ்வையும் பெற்றுத் தர உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர.அரு. பிதா..*
4. பெற்ற நம்பிக்கையை மறுதலிக்க ஓயாமல் நச்சரித்த போதும், அதிகப்படியான தண்டனைகளையும் அனுதினம் அனுபவித்த போதும், பாடுகளினால் இரத்தம் பாய்ந்தோடிய போதும், உம் வாழ்வில் துணைபுரிந்தவர்களுக்காகவும், அரசருக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செபித்து பிறரன்புப் பாதைக்குப் படிக்கல்லான பாத்திரமே! மறைசாட்சி புனித தேவசகாயமே! எங்களை துன்புறுத்துவோரையும், எங்களுக்கு எதிராக தீங்கு செய்வோரையும் நாங்கள் மன்னித்து, நாங்களும் பிறருக்கு எதிராக எந்தவித தீங்கும் செய்யாமல் தூய்மையான வாழ்வு வாழ எங்களுக்காக ஆண்டவரிடம் மன்றாட உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
5. கொடிய நடைபயணத்திலும், எருமை ஊர்வலத்திலும், துன்பங்களை புன்முறுவலுடன் ஏற்று "இயேசுவே துணையாக வாரும்" என வேண்டி, தீயசக்திகளை அடக்கி ஒடுக்கிய, பாசமிகு மரிஅன்னையின் பரிவன்பினை நாடி, வேண்டிய மறைசாட்சி புனித தேவசகாயமே! உம்மைப் போல் நாங்களும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து, நாளும் செபமாலை செபித்து, தீயதை அழித்து, துணையாக இறைவனை வேண்டி துதிக்கவும், அதன் மூலம் எங்கள் உள்ளம் தூய்மை பெறவும், எங்களுக்காக இறைவனிடம் வேண்டுமாறு உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
6. நீர் கிறிஸ்தவராக வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவ மக்கள் மீது நீர் வைத்திருந்த அன்பை நினைத்தருளும். கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டு கஷ்டங்கள் அனுபவித்த நிலையிலும் மக்களுக்காகப் பரிந்து பேசி, அவர்களுக்காகக் கவலைப்பட்டு, வேண்டும் போது வேண்டிய புதுமைகளையும், நல்ல வாழ்க்கை நிலையையும் வழங்கிய வள்ளலே! மறைசாட்சி புனித தேவசகாயமே! சகாயம்தேடி, உம்மை நோக்கி அழும் எங்கள் இதயங்களைச் சுத்தமாக்கி இறைவனுக்கு உகந்ததாக்க உதவியருளும். உமக்கும், உமக்குவரம் தந்து வழிநடத்திய நம் இறைவனுக்கும் பிரமாணிக்கமுள்ள பிள்ளைகளாக வாழ வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து பெற்று தந்தருள வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
7. பாறையில் செபித்து தண்ணீர் வரச் செய்து, பாவிகளை மனந்திருப்பி, தூற்றியவரும் போற்றும்படி செய்து, கைமுட்டையும், கால்முட்டையும் காற்றாடிமலை பாறையில் சின்னமாகப்பதியச் செய்த மறைசாட்சி புனித தேவசகாயமே! இறைவனை இறுகப் பற்றிக்கொண்டு, எண்ணத்திலும் செயலிலும் உம்மைப் போல் பிறருக்கு மறையை போதித்து, இறைமதிப்பீடுகளின் விதையை விதைக்க வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத்தர வேண்டுமென்று உம்மைப் பார்த்து வேண்டுகிறோம்.
*-ஒரு பர. அரு. பிதா..*
8. கடின ஒறுத்தல் முயற்சிகளிலும், கலையாத தவத்தாலும் நிலைத்து நின்று, வேதசாட்சிகளின் வாழ்வைத் தெரிந்து கொண்டு ஊக்கம் பெற்ற மறைசாட்சி புனித தேவசகாயமே! புனிதர்களின் வாழ்வையும், அவர்களின் போதனைகளையும் நாங்கள் ஏற்று, மறைசாட்சிகளின் விசுவாச வாழ்வை மனதில் பதித்து, குடும்ப செபத்திலும், இறை உறவிலும் நிலைத்துநின்று பிறருக்கு முன் மாதிரியான உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டிய வரத்தை இறைவனிடமிருந்து பெற்று தர வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா..*
9. காற்றாடிமலையில் 5 குண்டுகளால் துளைக்கப்பட்டு, உயிர்பிரிந்து, விண்ணக அரியணையில், இறை அருளால் மறைசாட்சி மகுடம் பெற்று, கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தின் பீடத்தின் முன்பு அடக்கம் செய்யப்பட்டு, ஆயரால் தெதேயும் பாடி மகிமைப் படுத்தப்பட்ட மறைசாட்சி புனித தேவசகாயமே! எங்கள் மரண நேரத்தில் எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கி, அழியா பேரின்பத்தில் உம்முடன் சேர்ந்து நாங்களும் இறைவனின் விண்ணக வீட்டில் அவர் புகழ்பாட வரம் வேண்டி எங்களுக்காக இறைவனிடம் மன்றாட வேண்டுமென்று உம்மைப்பார்த்து வேண்டுகிறோம்.
*- ஒரு பர. அரு. பிதா*
இயேசு கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படிக்கு, கரம்பிடித்துக் காக்கும் மறைசாட்சி புனித தேவசகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
*🌹🙏🏻செபிப்போமாக🙏🏻🌹*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
துன்பங்கள் பலவற்றை ஏற்று, வேதனைகளை அனுபவித்து இயேசுவின் பாடுகளோடு இணைந்தவரே! நற்கருணை நாதரைப் பற்றிக் கொண்டு செபமாலையின் சக்தியால் சாத்தானை அடக்கியவரே! மன்றாட்டின் பயனாய் இறையருளை நிரம்பச் பெற்றவரே! சாவினை முன்னேற்பாடாகத் தெரிந்து கொண்டு சாந்தகுணம் நிறைந்தவராய் நறுமணம் பரப்பியவரே! எங்கள் மன்றாட்டுகளில் உமது வல்லமையுள்ள பரிந்துரையைச் சேர்த்து எங்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும். நாங்கள் வாழும் இடங்களில் நற்செய்தியை அறிவிக்க எங்களுக்கு உதவுபவர் நீரே! உலகமெங்கும் இறைவார்த்தை பரவ உதவி செய்தருளும் படி எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்