அஜித் பால்ராஜ்
4K views
3 months ago
எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல. திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்? ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி . கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லை சரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லை கரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லை உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை . - விஜயசங்கர் இராமச்சந்திரன், ஊடகவியலாளர் கரூரில் பலியான 30க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் #ஆழ்ந்த_இரங்கல் 💐💐💐 #Thala ajith song 1 #AK அஜித் 🎬 👑 🏍️🏍️ #🧍‍♂️தல அஜித் #Ajithkumar Fans #👦அஜித் Fans Club